தாம்பத்ய உறவிற்கு பின் பெண்கள் பிறப்புறுப்பில் எரிச்சல் வர இதுதான் காரணம்!
சில நேரங்களில் உங்கள் ஹார்மோன் சமநிலையில் இல்லை என்றாலும் அது உங்கள் உடலுறவில் பாதிக்கலாம்..
உடலுறவு
ஆரோக்கியமாக உடலுறவில் உடலளவிலும் மனதளவிலும் உள்ள அழுத்தங்களைத் தவிர்த்து உச்சக்கட்ட இன்பத்தைத் தரும். ஆனால் சிலருக்கு உடலுறவு சில அசௌகரியங்களையும் உண்டாக்கும். குறிப்பாகப் பெண்களுக்கு உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்பில் வலி , எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும்.
இது போன்ற பிரச்சனைகள் உடலுறவில் இருக்கும் போது வருவது இயல்பானதுதான். ஆனால் சில நேரங்களில் நோய்த் தொற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.எனவே உடலுறவுக்குப் பின் ஏற்படும் வலி, எரிச்சல் ஏன் உண்டாகிறது என்கிற காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுக்கு உடலுறவுக்குப் பின் அதிக எரிச்சல், வலி இருக்கிறது எனில் அது தொற்றாக இருக்கலாம்.அதாவது புணர்ச்சியின்போது வெளியாகும் வெள்ளை நிற பிறப்புறுப்பு திரவம் அரிப்பை உண்டாக்கலாம். மேலும் உடலுறவு செய்த பின் சிறுநீரை வெளியேற்றும் போது எரிச்சல், வலி உண்டாகும்.
பிறப்புறுப்பில் எரிச்சல்
ஆணுறை ஒவ்வாமை: உங்களுக்கு உடலுறவில் எந்த தொற்றும் இல்லை எனில் ஆணுறை ஒவ்வாமையாகக் கூட இருக்கலாம். அவை உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்குகிறது எனில் அரிப்பு, எரிச்சலைத் தரலாம்.
மேலும் சில நேரங்களில் உங்கள் ஹார்மோன் சமநிலையில் இல்லை என்றாலும் அது உங்கள் உடலுறவில் பாதிக்கலாம். மேலே குறிப்பிட்ட எதுவும் காரணமாக இல்லை எனில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.