இனி கவலை வேண்டாம்.. விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க இது போதும்!
வால்நட்டில் ஒமேகா-3-கொழுப்பு அமிலம் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளது.
விந்தணு
தற்போதைய வாழ்க்கை முறையில் ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும், வேலைப் பளு ,தூக்கமின்மை , மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது .
இதனால் பல்வேறு தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். உலகில் சுமார் 70 மில்லியன் மக்கள் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த விந்தணு எண்ணிக்கை உள்ள ஆண்களுக்கு நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நாட்பட்ட கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க வால்நட் பெரிதும் உதவுதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதாவது தினமும் குறைந்தது 75 கிராம் வால்நட் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வால்நட்ஸ்
வால்நட்டில் ஒமேகா-3-கொழுப்பு அமிலம் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளது .இந்த அமிலத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் அனைத்தும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன.
மேலும் வயது ரீதியாக ஆண்களைப் பிரித்து வைத்து அவர்களிடம் நடத்திய ஆய்வில், வால்நட் சாப்பிட்ட ஆண்களுக்கு விந்தணு ஆரோக்கியமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வால்நட்ஸ் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விந்தணுக்களின் செயல்திறனையும் அதிகரிக்கும்.
இதனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வால்நட்டை சாப்பிட வேண்டும்.ஒரு சில நாட்கள் மட்டும் சாப்பிட்டு விட்டுவிட்டால் அது பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.