பாலுணர்வை அதிகரிக்க வெற்றிலை போதும் - இப்படி ட்ரை பண்ணி பாருங்களே..!
பாலுணர்வை அதிகரிக்க வெற்றிலை சாறு உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெற்றிலை
வெற்றிலை என்பது விருந்தோம்பலுக்கான முடிவுரையாக இன்றும் நடைமுறையில் உள்ள ஒன்று. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். உணவுக்குப் பின் வெற்றிலை சாப்பிடுவது செரிமானத்தைச் சீராக்கும். அத்தகைய வெற்றிலை உடல்நலப் பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம். வெற்றிலை சாற்றுடன் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் இது வயிற்றுப்புண் மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
நார்ச்சத்து அதிகமுள்ள வெற்றிலையில், மிளகிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள், மிளகின் போன்றவை சேர்வதால், உடலிலுள்ள கொழுப்பை உடைக்க எளிதாக உதவுகின்றன. உடலில் எங்காவது சிறிய வெட்டுக்காயம் இருந்தால், வெற்றிலைச் சாற்றை அங்கே தடவலாம். இது சிறந்த வலி நிவாரணியாக இருக்கும்.
பாலுணர்வு
வெற்றிலைச் சாற்றால் உடலில் உள்ள உள் வலியும் குறையும். மேலும் சிலருக்கு உடலுறவில் ஆர்வம் இருக்காது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வேலை அழுத்தம், உறவுமுறை அழுத்தம், மன நிலை போன்றவற்றுடன், சில சமயங்களில் நீங்கள் உண்ணும் உணவும் இதற்குக் காரணமாகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இதனை வீட்டில் உள்ள வெற்றிலையைக் கொண்டு சரி செய்யலாம்.வெற்றிலை சாறு பாலுணர்வை அதிகரிக்கிறது. அதாவது உடலுறவில் ஈடுபாடு குறைகிறது எனில் வெற்றிலை
வாரம் முன்று முறை சாப்பிட ஆசையைத் தூண்டுகிறது. இந்த வைத்தியம் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.