தினமும் இதை தேய்த்தால் முடி பள பளனு ஷைனிங்கா மாறிடும்! உடனே தீர்வு!
புரதம் நிறைந்த முட்டை தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்திருக்கும். முடியின் ஆரோக்கியத்துக்கு தேவையான புரதம் முட்டையில் உள்ளது.
கூந்தலுக்கு முட்டையை விட சிறந்த ஹேர் மாஸ்க் இருக்க முடியாது. முடியின் பிரகாசத்தை இயற்கையாகவே அளிக்க முட்டை உதவக்கூடும். முட்டை முடியை அடர்த்தியாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது. தலைமுடி அதிகம் உதிர்ந்தால் சேதமடைந்தால் எல்லா நேரங்களிலும் அது மெல்லியதாக மாற்றிவிடும்.
முட்டையை பயன்படுத்தும் போது முடி பராமரிப்பு எளிதாக கூடும். ஒவ்வொரு வாரமும் இந்த முட்டை மாஸ்க் பயன்படுத்தினால் முடிக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
முட்டை மாஸ்க்:
முட்டையில் எதையும் சேர்க்காமல் வெறும் முட்டையை மட்டும் கலக்கி அதை கூந்தலில் தடவி எடுக்கலாம். முட்டை பல குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. முட்டையை உடைத்து மஞ்சள் மற்றும் வெள்ளைக்கரு இரண்டையும் நன்றாக கலந்து விடவும். முடியின் அடர்த்தி நீளத்துக்கேற்ப ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை பயன்படுத்தலாம். முட்டையின் வாசனையை போக்க அதில் நீர்த்த எலுமிச்சை சாறு அல்லது கடுகு எண்ணெய் சேர்க்கலாம். இது கூந்தலில் வாடை வருவதை தடுக்கும்.
முட்டை மருதாணி மாஸ்க்:
கூந்தலுக்கு மருதாணி மாஸ்க் பயன்படுத்தவில்லை என்றாலும் முட்டையுடன் இரண்டு டீஸ்பூன் பயன்படுத்தும் போது மருதாணி நிறம் கூந்தலில் ஒட்டாது. ஆனால் கூந்தலை நிலைபடுத்தும். முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளை கரு இரண்டையும் நன்றாக அடித்து அதில் மருதாணி தூள் சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன் நீர்த்தது கடுகு எண்ணெய் 2 டீஸ்பூன் அனைத்தையும் கலந்து பேஸ்ட் ஆக்கி ஹேர் மாஸ்க் போல் முடியில் தடவி விடவும். பிறகு 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள். கண்டிஷனர் தவிர்க்காமல் பயன்படுத்துங்கள்
முட்டை கற்றாழை மாஸ்க்:
வறண்ட தலைமுடி இருப்பவர்களுக்கு இந்த முட்டை தேன் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க் உதவக்கூடும். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவதால் தலைமுடி ஈரப்பதமும் மென்மையும் அடையும் தலைமுடி பிரகாசமாக இருக்கும். முட்டையின் மஞ்சள் வெள்ளை இரண்டையும் நன்றாக கலக்கி அதில் தேன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக அடிக்கவும். இதை கூந்தலில் தடவி 45 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். வாரம் இரண்டு முறை கூட இதை செய்யலாம்.
முட்டை வாழைப்பழ முடி மாஸ்க்:
உயிரற்ற கூந்தலுக்கு பிரகாசம் அளிக்க இவை உதவக்கூடும். கூந்தலில் உயிர்ப்பில்லை என்று நினைத்தால் நீங்கள் முட்டையுடன் வாழைப்பழத்தை கலந்து போடலாம். முட்டையை உடைத்து நன்றாக கலக்கி அதில் கடுகு எண்ணெய், மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்றாக அடித்து கூந்தலில் தடவி 45 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு கூந்தலை அலசி எடுக்கவும். இது சேதம்டைந்த முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றக்கூடும். இது பயனுள்ளதாகவும் இருக்கும்.