ஆண்களே உஷார்.. செல்போனால் விந்தணு பாதிப்பு - எச்சரிக்கும் மருத்துவர்கள்!
அதிகமாக செல்போன் பயன்படுத்துவதாலும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உடல்நல பாதிப்பு
இதுகுறித்து பேசிய எய்ம்ஸ் மருத்டுவமனை உடற்கூறியல் துறையின் பேராசிரியர் டாக்டர் ரீமா தாதா "புகை பிடிப்பது மது அருந்துதல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது போன்றவை இப்போது அதிகரித்து வருகிறது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதும் உடல் நலத்தை பாதிக்கிறது. அதிகளவு புகைப்பிடித்தல் மற்றும் அதிகளவு செல்போன் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு விந்தணுவில் டிஎன்ஏ பாதிக்கப்படும்.
கருச்சிதைவுகள்
இதனால் ஆண்களுக்கு குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்புள்ளது. மேலும், மலட்டுத்தன்மை ஏற்படும் இந்த பழக்கங்கள் கொண்ட ஆண்களால், மனைவிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
புகைப்பிடித்தல், மது அருந்துவது அதிகப்படியான செல்போன் பயன்பாடு பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை உடல் பருமன் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் புற்றுநோய்கள், மன இறுக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.