ADHDஆல் பாதிக்கப்பட்ட நடிகர் பகத் பசில் - என்ன பாதிப்பு? இதன் அறிகுறிகள் தெரியுமா?

Fahadh Faasil Social Media
By Swetha May 29, 2024 11:05 AM GMT
Report

ADHD பாதிப்பு குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

ADHD பாதிப்பு

ADHD என்றால் அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர் (Attention Deficit Hyperactivity Disorder) என்று அர்த்தம். இது குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் கோளாறாகும். சுருக்கமாக சொல்லவேண்டுமேயானால் கவனக்குறைவு சீர்குலைவு என்று கூறலாம். இதனால் பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிகாக்கப்படுவார்கள்.

ADHDஆல் பாதிக்கப்பட்ட நடிகர் பகத் பசில் - என்ன பாதிப்பு? இதன் அறிகுறிகள் தெரியுமா? | What Is Adhd Disorder And Its Early Symptoms

அண்மையில் மலையாள ஸ்டார் ஹீரோவாக இருக்கும் பகத் ஃபாசில் தனக்கு ADHD கோளாறு இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது திரையுலகை மட்டுமன்றி அவருடைய ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மற்றும் பள்ளி வயது குழந்தைகளில் சுமார் 7% பேர் ADHD நோயால் பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நரம்பு மண்டலம், வளர்ச்சி அடையும் பருவத்தில் ஏற்படும் சில மாறுதல்களால் ஏடிஹெச்டி குறைபாடு உண்டாகிறது . மரபியல் ரீதியாகவும் இந்நோய் அடுத்த தலைமுறைக்கு கருதப்படுகிறது.

ADHDஆல் பாதிக்கப்பட்ட நடிகர் பகத் பசில் - என்ன பாதிப்பு? இதன் அறிகுறிகள் தெரியுமா? | What Is Adhd Disorder And Its Early Symptoms

இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியுலக வாழ்க்கை மற்றுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் செயல்திறனை கணிசமாக பாதிக்கிறது. மெல்ல மெல்ல உணர்ச்சிகளை நிர்வகிப்பதில் சிரமப்படுவார்கள், மிகவும் கவன குறைவாகவும், அதே சமயம் அதிவேகமாகவும் இருப்பார்கள். இவர்களால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார முடியாது.

மூளை சம்மந்தப்பட்ட அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகத் பாசில்? ரசிகர்கள் அதிர்ச்சி!

மூளை சம்மந்தப்பட்ட அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகத் பாசில்? ரசிகர்கள் அதிர்ச்சி!

அறிகுறிகள்  என்ன?

இந்த பதிப்பில் உள்ள குழந்தைகள் பேசுவதில் அர்த்தமும் இருக்காது. அடுத்தவர் பேசும்போது இடைமறித்து பேச முயல்வார்கள். ஆபத்தான செயல்களில் ஈடுபட விரும்புவார்கள். இந்த ADHD பாதிப்பு பெண் குழந்தைகளும், மிகையியக்கம் குறைபாட்டினால் ஆண் குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

ADHDஆல் பாதிக்கப்பட்ட நடிகர் பகத் பசில் - என்ன பாதிப்பு? இதன் அறிகுறிகள் தெரியுமா? | What Is Adhd Disorder And Its Early Symptoms

தன்னம்பிக்கை குறைபாடு, கவனக் குறைப்பாடுகள் ஏற்படும் என இதன் அறிகுறிகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவர் பேசும் போது அதை கவனிக்கும் திறன் எப்படி உள்ளது, பிறருடன் பழகும் திறன் உள்ளிட்டவற்றை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். உங்கள் செயல்பாட்டில் அமைதி தெரியவில்லை,

நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒரு விஷயத்தை செய்கிறீர்கள், தேவையற்ற நடத்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால், அதிக கவனக்குறைவுடன் இருக்கிறீர்கள் எனில் அது ADHD-ஆக இருக்க கூடும்.பொதுவாக இக்குறைபாடு அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சினையாக பார்க்கப்படுது.எனவே இதை கண்டு அச்சப்படவேண்டாம்.

ADHDஆல் பாதிக்கப்பட்ட நடிகர் பகத் பசில் - என்ன பாதிப்பு? இதன் அறிகுறிகள் தெரியுமா? | What Is Adhd Disorder And Its Early Symptoms

குழந்தைகளின் நடவடிக்கைகளை முதல் ஆறு மாதத்திற்கு கவனிக்க வேண்டும் ஆறு மாதங்களுக்கு மேலாகவும் இந்த அறிகுறைகள் நீடித்தால் மட்டுமே மருத்துவரை நாடலாம்.ஏடிஹெச்டி குறைபாட்டுக்கு முறையான உளவியல் மருத்துவரை அணுகி, ஆலோசனைகள், சிகிச்சைகள் எடுத்து கொள்வதன் மூலம் விரைவில் குணமாகலாம்.