ஆண்களே கவனம்...தப்பி தவறிக்கூட இந்த உணவுகளை சாப்பிட்றாதீங்க! என்ன ஆகும் தெரியுமா!
ஆண்கள் கட்டாயமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஆண்களே கவனம்
இந்த காலகட்டத்தில் வீட்டில் உண்ணும் உணவை விடவும் துரித உணவுகளை உட்கொள்வதே அதிகரித்துள்ளது. அதனால் ஆரோக்கியமாக வாழ ஆண்களுக்கும் பெண்களுக்கும், தினசரி அடிப்படையில் உணவுத் தேர்வுகள் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. அதில் ஆண்கள் குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.
அதாவது பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்திய ஆய்வில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.
1. சோயா உணவுகள்
சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ( phytoestrogens) அதிகம் உள்ளன. இதை அதிகமாக உட்கொள்வதால் உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று சில ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு ஆய்வில் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்துபவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.
2. பால் பொருட்கள்
பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களளை அதிக அளவு எடுத்துக்கொண்டால்
விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. பால் பொருட்களில் அத்தியாவசியமான கால்சியம், விட்டமின் டி சத்துக்கள் இருப்பினும் விந்து அணுக்களை பாதிக்கும் எனப்படுகிறது.
3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
மேற்கத்திய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தக்கூடிய பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சி வகைகளால்,
விந்து அணு எண்ணிக்கை குறைவதாக ஹார்வேர்டு ஆய்வு தெரிவித்துள்ளது. அதேபோல சிக்கன் சாப்பிடுவதற்கும் விந்தணு ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை.
4. கார்பனேட்டட் பானங்கள்
கார்பனேட்டட் பானங்கள் அதிகம் குடிப்பதால் விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
காற்று அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பான வகைகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும். இந்த பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அதிகம் கேடு விளைவிக்க கூடியவை.
5. ஜங்க் உணவுகள்
அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பர்கர், பீட்சா போன்ற உணவுகளை ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இந்த உணவுகளில் சேர்க்கப்படும் ஆரோக்கிய சீர்கேடு விளைவிக்கும் பொருட்கள் ஆண்களின் ஆண்மை தன்மையை குறையச் செய்கிறது. அதிகமான எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகள் உடல் எடை அதிகரித்து, ஆண்மையின் சிதைவுக்கு காரணமாக அமைகிறது..