அதை செய்தால் 'எம்எஸ் தோனியை' எளிதாக கடுப்பேற்றலாம் - ஹைடன் சொன்ன டாப் சீக்ரெட்!

MS Dhoni Chennai Super Kings Cricket Indian Cricket Team Sports
By Jiyath Dec 12, 2023 05:14 AM GMT
Report

சுமாராக ஃபீல்டிங் செய்தால் எம்.எஸ்.தோனியை எளிதாக கடுப்பேற்றி விடலாம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. 2007ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை, 2011ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.

அதை செய்தால்

இதனால் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்த ஒரே இந்திய கேப்டனாக எம்எஸ் தோனி இருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் தோனி, இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

World Cup: காதலியை பிரிந்தது போன்ற இந்திய வீர்களின் நிலைமை.. - பாஃப் டு பிளெசிஸ் பளீச்!

World Cup: காதலியை பிரிந்தது போன்ற இந்திய வீர்களின் நிலைமை.. - பாஃப் டு பிளெசிஸ் பளீச்!

மேத்யூ ஹைடன் 

இந்நிலையில், எப்போதும் கூலாக இருக்கக்கூடிய தோனியை, சுமாராக ஃபீல்டிங் செய்தால் எளிதாக கடுப்பேற்றி கோபமடையச் செய்யலாம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

அதை செய்தால்

இது தொடர்பாக அவர் கூறியதாவது "எம்.எஸ்.தோனியை நீங்கள் மைதானத்தில் கடுப்பேற்ற வேண்டும் என்று நினைத்தால் மந்தமான ஃபீல்டிங் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். மேலும் நல்ல ஃபீல்டிங்கில் முக்கிய பங்காற்றாதீர்கள்”என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், தோனி மற்றும் மைக் ஹஸ்ஸி ஆகியோருக்கு ஓட்டப்பந்தயம் வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, எம்.எஸ்.தோனி தான் என்று கூறியுள்ளார். மேத்யூ ஹைடன் எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.