World Cup: காதலியை பிரிந்தது போன்ற இந்திய வீர்களின் நிலைமை.. - பாஃப் டு பிளெசிஸ் பளீச்!

Jiyath
in கிரிக்கெட்Report this article
உலகக் கோப்பை தோல்வியால் இந்திய வீரர்களின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தோல்வி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
இந்திய அணி தோல்வியடைந்த அந்த நேரத்தில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் களத்திலேயே கண்கலங்கி நின்றனர். இதனைப் பார்த்த ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை தோல்வியால் இந்திய வீரர்களின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
பாஃப் டு பிளெசிஸ்
அவர் கூறியதாவது "2015 உலகக் கோப்பையில் நானும் இதே போன்ற வீழ்ச்சியை ஒரு கிரிக்கெட்டராக சந்தித்தது இன்னும் நினைவிருக்கிறது. தோல்வியால் கிடைத்த இதய வலியில் இருந்து வெளிவர சிறிது நேரம் எடுக்கும்.
அது காதலியுடன் பிரிந்து செல்வது போன்ற உணர்வை கொடுக்கும் என்பதால் உடனடியாக வெளிவர முடியாது. இந்த உலகக்கோப்பையில் இந்தியா நம்ப முடியாத அளவுக்கு அபாரமாக விளையாடியது.
அதனால் கண்டிப்பாக அவர்கள் அதே போன்ற உணர்வையும் இதயம் உடைந்த சூழ்நிலையையும் சந்தித்திருப்பார்கள். அது அவர்கள் வெல்ல வேண்டிய உலகக் கோப்பை. அந்த வலிகள் ஆறுவதற்கு சற்று காலங்கள் தேவைப்படும்" என்றார்.