நெற்றியில் வழிந்த ரத்தம்; வீடு திரும்பிய மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?
மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி(69) கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது. நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டுள்ளது.
நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு காயத்துடன் முகத்தில் ரத்தம் வழியும் நிலையில் மருத்துவமனை படுக்கையில் மம்தா சிகிச்சை பெறும் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
என்ன நடந்தது?
அதனைத் தொடர்ந்து, அவர் விரைந்து குணம் பெற வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டார்.
ஆனால், அவர் வீடு செல்வதாக தெரிவித்த நிலையில், வீடு திரும்பியுள்ளார்.
அதன்பின், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார். மருத்துவ வல்லுநர்கள் வழங்கும் ஆலோசனையின்படி அவருக்கு மேல் சிகிச்சை வழங்கப்படும் என எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை இயக்குனர் மணிமோய் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார்.