அக்னிபத் மூலம் பாஜகவுக்கு சொந்த ஆயுதப்படைக்கான முயற்சி - மம்தா பானர்ஜி காட்டம்
அக்னிபத் திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது.
அக்னிபத்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத்-ஐ அறிமுகப்படுத்தினார். அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,
பணி நிரந்தரமும், எந்தவித ஓய்வூதியப் பலன்களும் இல்லாமல் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மம்தா பானர்ஜி
இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:- 'அக்னிபத்' திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது.
4 ஆண்டு கால பணிக்கு பிறகு அக்னி வீரர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் கையில் ஆயுதங்களை கொடுக்க பா.ஜனதா விரும்புகிறது. அவர்களை தங்கள் கட்சி அலுவலக காவலாளிகளாக நியமிக்க பா.ஜனதா திட்டமிடுகிறது போலும்.
பா.ஜனதா திட்டம்
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக இத்தகைய திட்டங்களை அறிவித்து மக்களை பா.ஜனதா முட்டாளாக்க பார்க்கிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிவிட்டு, தற்போது முட்டாள்தனமான அறிவிப்புகளை வெளியிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் நாக சைதன்யா! மீண்டும் காதலா?