பாஜகவுடன் கள்ள உறவு; 2024 தேர்தலில் தனித்தே போட்டி - மம்தா பானர்ஜி திட்டவட்டம்
2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
மேற்குவங்கம், சாகர்டிகி சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட அம்மாநில அமைச்சர் சுப்ரதா சஹா காலமானார். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடந்தது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தோபாஷிஸ் பானர்ஜியை விட
22,980 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் போரான் பிஸ்வாஸ் வெற்றி பெற்றார். பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, பாஜக தனது வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்றம் செய்துள்ளதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும்,
உறுதி
பாஜகவின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி இனிமேல் தன்னை பாஜகவிற்கு எதிரான கட்சி என சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விட்டது. பாஜகவோடு காங்கிரசும், இடதுசாரிகளும் கள்ள உறவு வைத்துள்ளதால் வரும்
2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்து தனித்தே போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம். பாஜகவை எதிர்க்கும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.