வந்தே பாரத் ரயிலில் பெருசா ஒன்னும் இல்லை : மம்தா பானர்ஜி விமர்சனம்
Mamata Banerjee
By Irumporai
வந்தே பாரத் ரயிலில் எந்த சிறப்பும் இல்லை என மேற்வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயில்
மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் வந்தே ரயில் தொடங்கப்பட்ட நிலையில் அந்த ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே ரயில் மீது கற்கள் வீசப்பட்டன என்று மாநிலத்தை அவதூறு செய்யும் வகையில் ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பழைய ரயில்தான்
மேலும் வந்தே பாரத் ரயிலில் எந்த சிறப்பும் இல்லை என்றும் இது ஒரு புதிய எஞ்சின் பொருத்தப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில் தான் என்றும் மம்தா கூறியுள்ளார்.