ஒரு மாதம் வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க!
வெங்காயத்தில் உள்ள நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
வெங்காயம்
வீட்டில் அன்றாட சமையலில் பெரும்பாலும் பயன்படுத்துவது வெங்காயமாக தான் இருக்கும். அதனால் உணவுக்கே ஒரு தனி சுவை உண்டு. ஆனால், அதை உரிக்கும் ஒவ்வொருவரின் கண்களையும் கலங்க வைப்பதோடு, அவ்வபோது அதை வாங்கும் மக்களையும் அசைத்து பார்க்கும் வல்லமை கொண்டது.
அப்படிபட்ட இந்த வெங்காயத்தை ஒரு மாதம் உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் நமது உடலில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் குறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெங்காயம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால், உணவில் இருந்து விலக்கி வைத்தால், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என மூத்த ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
என்ன நடக்கும்?
குறிப்பாக, அதில் உள்ள வைட்டமின் சி, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவை நோயெதிர்ப்பு சக்தி, செல் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. இதில், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் இருக்கின்றன. வெங்காயத்தை ஒரு மாதம் தவிர்த்தால் உடல் நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படாது.
இருப்பினும், சில நுட்பமான மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். வெங்காயத்தை தவிர்ப்பதால், அதில் உள்ள நார்ச்சத்து கிடைக்காமல் மலச்சிக்கல் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. அத்துடன் செரிமான பிரச்சனையும் ஏற்படும்.மேலும், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள்
கிடைக்காது என்பதால், உடலில் நோயெதிர்ப்பு பலவீனம், சோர்வு, ரத்த சிவப்பு உருவாக்கம், ரத்தம் உறைதல் போன்றவற்றில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.