சாப்பிட்ட உடனே டீ இல்ல காபி குடிப்பீங்களா? வேண்டவே வேண்டாம் - எச்சரிக்கும் ICMR
தேநீர் மற்றும் காபியில் "காஃபின் உள்ளது என்ற காரணத்தால், நரம்பு மண்டலத்தைத் அவை பாதிப்படைய வைக்கும் என ICMR ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தேநீர் மற்றும் காபி அதிகமாக குடிப்பவர்களை அதனை குறைக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) உடன் இணைந்து ICMR சமீபத்தில் 17 புதிய உணவு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.
ஆராய்ச்சியில் டீ மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வதற்கு எதிராக மருத்துவ நிபுணர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. தேநீர் மற்றும் காபியில் "காஃபின் உள்ளது, இது மத்திய நரம்பு மண்டலத்தைத் அதீத அளவில் தூண்டுகிறது.
வழிகாட்டுதல்களின் படி, 150 மிலி கப் காய்ச்சிய காபியில் 80 - 120 மி.கி காஃபின் உள்ளது, அதே போல, இன்ஸ்டன்ட் காபியில் 50 - 65 மி.கி காஃபினும் தேநீரில் 30 - 65 மி.கி காஃபினும் உள்ளது. உணவுக்கு முன்னும் பின்னும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு தேநீர் அல்லது காபியைத் தவிர்க்குமாறு மருத்துவ அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஏனெனில் அவற்றில் இருக்கும் டானின்கள் உடலில் இரும்பு இன்டேக்கை குறைக்கின்றன. இந்த டானின்கள் வயிற்றில் இரும்புடன் இணையும் நிலையில், உடல் இரும்பை சரியாக உறிஞ்சுவதில் கடினம் ஏற்படுகிறது. இது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.