உலகின் costly டீ தூள் தெரியுமா..? 1 கிலோ டீ தூள் 10 கோடி? - அப்படி என்ன இருக்குது?
உலகில் பெரும்பாலும் விரும்பும் குடிக்கும் உட்கொள்ளுவது டீ.
டீ
நீரின்று அமையாது உலகு என்ற பழமையை தற்போதைய இளைஞர்கள் டீ இன்றி அமையாது நானு என மாற்றி ஹாஸ்டேக் போடும் அளவிற்கு டீ மிக பிரபலம்.
இந்தியாவில் மட்டுமில்லை உலகின் பல இடங்களிலும் காலை மாலை என்பதை தாண்டி தோணும் போதெல்லாம் டீ குடிப்பவர்கள் அதிகம். காலையில் எழும் போதே டீ வேண்டும் என அடம் பிடிக்கும் அப்பாக்களை நாம் காணாமல் இருந்ததில்லை.
சாமானியனுக்கு உட்கொள்ளும் டீ'யில் பல ரகங்களும் உள்ளது. உலர் தேயிலை ஒரு கிலோ சுமார் 600 ரூபாய் மட்டுமே வரும். ஆனால், பலரின் சொத்துக்களை விற்றால் கூட பருக முடியாத அளவிற்கு விலை உயர்ந்த டேங் ஒன்று உலகில் இருப்பது உங்களுக்கு தெரியுமா..?
அப்படி என்ன இருக்கிறது..?
டா ஹாங் போ எனப்படும் இந்த டீ'யின் ஒரு கிலோ 10 கோடி ரூபாய். இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இப்பொது அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை காணலாம். இந்த ஆடம்பர டீ சீனா நாட்டில் கிடைக்கிறது. இவை வெறுக்கும் வளருவதில்லை.
அதுவும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலே. அதுவும் விலை அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம். குறிப்பாக இந்த டீ'யில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதற்கு பின்னால் ஒரு ராஜ கதையும் உள்ளது. சீனா நாட்டை ஆண்ட மிங் வம்ச குலத்து அரசி ஒருவர் உடல் நலம் குன்றி படுக்கையில் படுத்தபடியாக இருந்துள்ளார்.
அதன் காரணமாக அரசர் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அரசை சேர்ந்த மருத்துவர்கள் கடைசி முயற்சியாக தேநீர் மூலம் சிகிச்சை அளிக்க, ராணியின் உடல்நிலை மேல சரியாகியுள்ளது.
அதன் காரணாமாகவே அந்நாட்டில் இந்த டீயின் மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.
தேசிய பொக்கிஷமாக சீனா இந்த தேயிலை அறிவித்துள்ளது. 20 கிராம் தேயிலை தூள் மட்டும் 23 லட்சமாம். எனவே இந்த டீகள் தான் உலகின் விலை உயர்ந்த தேயிலை தூள் வகை என கூறப்படுகிறது.