ஹெல்தியா இருக்க.. சாப்பிட்ட பிறகு என்ன செய்யலாம்.. செய்யக்கூடாது என தெரிஞ்சிகோங்க!
Healthy Food Recipes
India
World
By Swetha
சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்வதை தவிர்த்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் காணலாம்.
ஹெல்தியா இருக்க..
இன்றைய காலகட்டத்தில் உணவுமுறை சற்று மாற்றமடைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அளவு தூக்கம் உள்ளிட்டவை கட்டாயம் அவசியம்.
ஒருவேளை சரியான நேரத்தில் சாப்பிடாதது, அஜீரணத்தை அதிகரிக்கும். இது பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும். எனவே என்ன மாதிரி சாப்பிடலாம், சப்பிட்ட பிறகு முன்பும் பின்பும் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்துள்ளார்.
சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை
- சாப்பிட்ட உடன் குளிக்க கூடாது. ஏனெனில் சாப்பிட்ட பிறகு வயிறு பகுதியை சுற்றி ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இது ஜீரணத்திற்கு வழிவகுக்கும். ஆனால், குளித்தால் உடலின் வெப்ப நிலை மாற்றம் அடையும். இதனால், ஜீரணம் ஆவதில் தாமதம் ஏற்படும். எனவே சப்பிட்ட பின் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளலாம்.
- உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட உடன் கடுமையான உடற்பயிசியில் ஈடுபடுவது ஜீரண நடைமுறையை பாதிக்கும். குமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவற்றிற்கும் வழிவகுக்கும். வயிற்றில் அமில தன்மையை அதிகரிக்கும்.
- சாப்பிட்ட உடன் தூங்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. தூங்காவிட்டாலும் கூட சிலர் சாப்பிட்ட சிறிது நேரத்தில் படுத்து கிடப்பார்கள். இப்படியான பழக்கத்தை கைவிடுவது நல்லது. ஏனெனில், ஜீரணிப்பதில் சிரமம் ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் ஏற்படும். தூங்கி விழிக்கும்போது வயிறு நிறைந்து இருப்பது போலவே இருக்கும்.
- சாப்பிட்ட உடன் அதிகப்படியான தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனினில், அதிகமாக தண்ணீர் குடிப்பது ஜீரணம் எளிதில் ஆவதில் தாமதமாக்கும். ஜீரணத்திற்கு உதவும் அமிலத்தை நீர்த்து போக செய்துவிடும்.
- சாப்பிட்ட உடன் பழங்கள் உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், பழங்களில் உள்ள ஊட்டச்தத்துக்கள் முழுமையாக நம் உடலுக்கு இதனால் கிடைக்காமல் போகக் கூடும்.
- டீ / காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் டீ, காபியில் உள்ள பினோலிக் கலவைகள், உணவில் உள்ள இரும்புச்சத்து போன்ற ஊட்டச்த்துக்களை உறிஞ்சுக்கொள்வதில் இடையூறு ஏற்படுத்தும்.
- சாப்பிட்டு முடித்த உடன் மது / புகை பிடித்தல் கூடாது. இந்த இரண்டும் இயல்பாக உடல் நலனுக்கு கேடு என்றாலும் கூட சாப்பிட்ட உடன் இதை செய்தால் இருதய பாதிப்புகள் ஏற்படுவது அதிகரிக்கும்.
சாப்பிட்டதும் செய்யக்கூடியவை
- சாப்பிட்ட உடன் சுறுசுறுப்பாக நமது செயல்பாடுகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதேவேளையில் எதையும் கடுமையாக செய்யக் கூடாது. அரை கிளாஸ் சூடான தண்ணீர் குடிக்கலாம். இது உணவு எளிதில் ஜீரணம் ஆக உதவும். தாமதமாக மதிய உணவு உட்கொண்டாலும் கூட எளிதில் ஜீரணம் ஆக இது உதவும்.