உடல் எடைய குறைக்கனுமா? இதோ அழகிய பானம்!

juice neem leaf lifestyle health
By Anupriyamkumaresan Jun 27, 2021 08:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உணவு
Report

வேப்பிலை கசப்புத்தன்மை கொண்டது என்பதாலேயே இதை பலரும் விரும்புவதில்லை. ஆனால் இயற்கையாகவே தாவரங்களில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உறுதியாக நம்பலாம். உடல் எடையை குறைக்க நீங்கள் கடுமையாக முயற்சி செய்தால் நீங்கள் வேப்பிலை சாறு உட்கொள்ளலாம்.

வேப்பிலை வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், கார்ப்ஸ் மற்றும் புரதங்கள் போன்ற கூறுகள் வேப்பிலையில் உண்டு. இவையெல்லாம் நம் உடலின் அன்றாட தேவையின் ஒரு பகுதியே ஆகும். வேப்பிலையில் இருக்கும் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தி முதல் செரிமானத்தை மேம்படுத்துதல் வரை இவை உதவுகின்றன.

உடல் எடைய குறைக்கனுமா? இதோ அழகிய பானம்! | Lifestyle Health Tips For Boys And Girls Neemjuice

வேப்பிலை சாறு, தேன் இரண்டையும் கலப்பதன் மூலம் எடையை குறைப்பது எளிதாக இருக்கும். உங்களுக்கு வேப்பிலையின் கசப்புத்தன்மை பிடிக்காவிட்டாலும் உங்கள் எடையை குறைக்க இவை உதவும். ​

வயிற்றை நிறைவாக வைக்கிறது:

எடை அதிகரிக்க காரணம் காலையிலும் மாலையிலும் நாம் எடுத்துகொள்ளும் சிற்றுண்டி வகைகள் தான். இந்த சூழ்நிலையில் வேப்பிலை சாறு எடுப்பதன் மூலம் சிற்றுண்டியை முழுமையாக நிறுத்தலாம். உண்மையில், வேப்பிலை அதிக நார்ச்சத்து உள்ளடக்கியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில்,நீங்கள் வேப்ப சாற்றை எடுத்துகொள்ளலாம். இது செரிமான செயல்முறையை குறைத்து வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கும். ​

உடல் எடைய குறைக்கனுமா? இதோ அழகிய பானம்! | Lifestyle Health Tips For Boys And Girls Neemjuice

உடல் சுத்தமும் தூய்மையும் :

வேப்ப இலை சாறு உடலின் உள் அமைப்பை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைக்கிறது. இது நச்சுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இராசயனங்கள் ஆகியவற்றை நீக்குகிறது. இதனுடன் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பதற்கான காரணங்களையும் குறைக்கிறது.மேலும் உடலில் இருந்து ஒவ்வாமை பொருள்களை வெளியேற்றுவதன் மூலம் இது செயல்படுகிறது. இந்த பண்புகளின் அடிப்படையில் எடையை குறைப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லலாம். ​

உடல் எடைய குறைக்கனுமா? இதோ அழகிய பானம்! | Lifestyle Health Tips For Boys And Girls Neemjuice

கொழுப்பு சேர்வதை தடுக்கும் :

வேப்ப இலைசாறு மூலம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது உடலுக்கு மிகவும் எளிதானது. இது உடலில் கொழுப்பு உறிஞ்சாமல் தடுக்கிறது. இதனால் உடலில் அதிக கொழுப்பு சேராது. அதோடு வேப்ப இலை சாறு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திலும் நேர்மறையான விளைவை கொண்டிருக்கிறது. வேறு எந்த வகை உணவு முறை அல்லது தீர்வை விட சிறந்தது. அன்றாட வழக்கத்தில் வேப்பிலை சாறு எடுத்துகொள்வது கொழுப்பையும் எடையையும் குறைக்கும். ​

உடல் எடைய குறைக்கனுமா? இதோ அழகிய பானம்! | Lifestyle Health Tips For Boys And Girls Neemjuice

கொழுப்பை எரிக்க உதவும்:

வேப்ப இலை சாறு எடுத்துகொள்வதால் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்க தொடங்குகிறது என்பதை பார்த்தோம். இது கொழுப்பை அதிகரிக்கும் என்சைம்களின் வளர்ச்சியை நிறுத்துகிறது. இது மட்டுமல்லாமல் வேப்பிலை சாறு எடுத்துகொள்வதால் கொழுப்பு எரிக்கும் ஹார்மோன்கள் உடலில் மிக வேகமாக அதிகரிக்க தொடங்குகின்றன. இதன் காரணமாக கொழுப்பு உடலில் இருந்து வேகமாக குறைய தொடங்குகிறது. இந்த சூழலில் எடை குறைவதற்கு வேப்பிலை சாறு சிறந்த இயற்கை வழி என்று சொல்லலாம்.

உடல் எடைய குறைக்கனுமா? இதோ அழகிய பானம்! | Lifestyle Health Tips For Boys And Girls Neemjuice