உலகிலேயே மிகவும் நீண்ட விமான பயணம் - முதலிடத்தில் உள்ள நாடு இது தானாம்!
உலகிலேயே மிக அதிக தூரம், இடைவிடாமல் பயணிக்கும் விமான பயணங்களை குறித்து இந்த பதிவில் காணலாம்.
விமானம் பயணம்
விமான பயணம் என்றாலே சற்று திகிலாகத் தான் இருக்கும். குறிப்பாக விமானம் பத்திரமாக தரையிறங்க வேண்டும் என்ற பயம், பயணிகளின் மனதில் இருந்துகொண்டே இருக்கும்.
இந்த காலகட்டத்தில் நீண்ட தூர கேரியர்கள் மிகவும் வசதியான பயணத்தை வழங்க மேம்படுத்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஆரோக்கியமான உணவை வழங்குதல், வசதியான பயணத்திற்கான இருக்ககைகள், வணிக வகுப்பை மேம்படுத்துதல்ம், தரத்தை மேம்படுத்துதல் என விமானங்கள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உலகிலேயே மிகவும் நீண்ட தூரம் இடைவிடாத விமான பயணங்கள் பட்டியல் இவைதான்.
1. சிங்கப்பூர் to நியூயார்க்
உலகின் நீண்ட தூரம் விமான பயணங்களை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் செய்வதாகும். இடைவிடாத இந்த பயண சேவையானது 2020இல் தொடங்கி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த இரு நகரங்களுக்கும் இடையில் 9,537 மைல்கள் உள்ளது. எனவே, இதை கடக்க 18 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. சிங்கப்பூர் - நெவார்க்
கோவிட் -19 தொற்று பரவல் தோன்றும் வரை, மிக நீண்ட பாதையாக இருந்தது.
இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைந்துள்ள நெவார்க் நகரத்திற்கு இயக்கப்படும் விமான பாதை உலகின் மிக நீண்ட 2 ஆவது விமான பயணமாகும்.
இது 534 மைல்கள்கொண்ட பயணமாகும். கட்டாயம் 18 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு குறையாமல் இந்த தூரத்தை கடக்க முடியாது.
3. தோஹா - ஆக்லாந்து
மூன்றாவது இடத்தில், வளைகுடா நாட்டில் உள்ள தோஹாவில் இருந்து ஆக்லாந்து செல்லும் விமான பயணம் ஆகும்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கத்தார் ஏர்வேஸ் சேவையை தொடங்கியாது, தோஹா மற்றும் ஆக்லாந்து இடையிலான 9,032 மைல்களை கடக்க 17 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகிறது.
4. பெர்த் - லண்டன் ஹீத்ரோ
தினசரி செயல்படும் விமான சேவையாக 2018இல் தொடங்கியது, இந்த ஒரு விமான எண் மற்றும் ஒரு நிறுத்தத்தைக் கொண்டிருப்பதால், இது 'நேரடி' பாதையின் வரையறையாகும். ஸ்திரேலியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இடைவிடாத ஒரே சேவையாக இருந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் இங்கிலாந்டின் லண்டனுக்கு இடையிலான 9003 மைல்கள் தூரத்தை கடக்க 17 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகிறது.
5. மெல்போர்ன் - டல்லாஸ்
ஐந்தாவது இடத்தில் மெல்போர்ன் மற்றும் டல்லாஸ் இடையே இயக்கப்படும் குவாண்டாஸ் உள்ளது.
கடந்த 2022 இல் தொடங்கிய இந்த சேவை, 8,973 மைல்கள் (14,440 கிமீ), இந்த பாதை மூன்று-வகுப்பு, 236-இருக்கை போயிங் 787-9 ஐப் பயன்படுத்தி வாரந்தோறும் மூன்று முறை இயக்கப்படுகிறது. மெல்போர்னில் இருந்து டல்லாஸ் செல்லும் இந்த விமானம் தொடர்ந்து 17 மணி நேரம் 10 நிமிடங்கள் வானில் பறக்கிறது.