உலகின் நீண்ட பேருந்து பயணம்; 56 நாட்களில் 22 நாடுகளுக்கு பயணம் செய்ய ஆர்வம் காட்டும் மக்கள்
துருக்கி, இஸ்தான்புல் நகரத்தில் இருந்து லண்டன் வரை உலகின் நீண்ட பேருந்து பயணத்தை தொடங்கியது "அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் " நிறுவனப் பேருந்து.
இந்திய சாலைப் பயண வணிக நிறுவனத்தின் முயற்ச்சி
துருக்கியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இஸ்தான்புல் , இந்நகரத்தில் இருந்து லண்டனுக்கு பேருந்து பயணம் தொடங்கப்பட்டுள்ளது .
2023 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 30 பயணிகளுடன் இந்த பயணம் தொடங்கவுள்ளது . இந்த 12000 கிமீ உல்லாச பேருந்து பயணத்தை இந்திய சாலைப் பயண வணிக நிறுவன "அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் " பேருந்து ஏற்பாடு செய்துள்ளது .
கின்னஸ் உலகசாதனை முறியடிப்பு
கின்னஸ் உலக சாதனையின் படி ,பெருவின் லிமா மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை இணைக்கும் பயணமான 6,200 கிமீ பேருந்து பயணம் தான் உலகின் நீண்ட பேருந்து பயணமாக இருந்து வந்தது.
இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக "அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் " பேருந்து பயணம் உள்ளது. இஸ்தான்புல்லிருந்து லண்டன் வரையிலான 12,0000 கிமீ தூரத்தை கடக்க உள்ளது .
பயணத்தின் சிறப்பம்சங்கள்
நார்வே ஃபிஜோர்ட்ஸைச் சுற்றி கப்பல் பயணம் ,பின்லாந்து வளைகுடா முழுவதும் படகு சவாரி , ஆகியவை இந்த சுற்று பயணத்தில் அமைந்துள்ளது.
ஐரோப்பிய கண்டத்தின் வடக்கு பகுதில் பயணிப்பது சிறப்பு அம்சமாக இடம் பெற்றுள்ளது . தினசரி மூன்று வேலை உணவு ,தங்கும் ஹோட்டல் இடங்கள் என அனைத்தும் இந்த பயண தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .
பணிகளுக்கு சொகுசான நாற்காலிகள் , கவலையை போக்க AVX மற்றும் USB பொருட்களும் தனிப்பட்ட பொழுதுபோக்கு அமைப்புகளை வழங்குகிறது.
இந்த பயணத்திற்கான டிக்கெட் மதிப்பு $ 24,300 ஆக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் டிக்கெட் விலை ரூ 20 லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.