உலகின் நீளமான ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே சாதனை... - வியப்பூட்டும் வீடியோ வைரல்...!

Switzerland Guinness World Records
By Nandhini Oct 31, 2022 11:16 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

1.9 கி.மீ. நீளமும், 100 பெட்டிகளும் கொண்ட உலகின் நீளமான பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே சாதனை படைத்துள்ளது.

உலகின் நீளமான ரயிலை இயக்கி சாதனை

உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் என்ற சாதனையைப் படைத்துள்ளதாக சுவிஸ் ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று ஆல்ப்ஸ் மலைகள் வழியாக இந்த சாதனை படைக்கப்பட்டது. இந்த ரயில் 100 பெட்டிகள், 4 என்ஜின்களுடன் 1.9-கிமீ நீளமுள்ள ரயிலை அல்புலா / பெர்னினா வழித்தடத்தில் பிரேடாவிலிருந்து பெர்குவென் வரை இயக்கியது.

இந்த ரயில் 22 சுரங்கங்கள் வழியாக சென்றது. அவற்றில் சில மலைகள் வழியாக நீண்ட பாம்பு போல் சுழன்றது. புகழ்பெற்ற லேண்ட்வேசர், வையாடக்ட் உட்பட 48 பாலங்கள் வழியாக ஊர்ந்து சென்றது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். 

switzerland-world-record-length-of-the-train