இது ரொம்ப danger.. சிறுநீரின் நிறம் இப்படி மாறினால் புற்று நோயின் அறிகுறி!
நம்முடைய உடலில் என்ன நோய் இருக்கிறது என்பதைச் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்களுக்குக் கண்டறியலாம்.
சிறுநீரின் நிறம்
மனித உடலைப் பல வித நோய் தொற்றுத் தாக்குகின்றனர். அதிலும் பெரும்பாலான நோய்களுக்கான அறிகுறிகளை நம் உடல் பல விதங்களில் நமக்குக் காட்டுகின்றது. உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு நோய் தோற்று ஏற்பட்டால் முதலில் மருத்துவர் அவரிடம் முதலில் சிறுநீர் பரிசோதனையை (Urine Test) செய்துகொள்ளுமாறு கூறுகிறார். ஏனென்றால், சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.
பொதுவாக மனிதனின் சிறுநீரின் நிறம் வெளிர், மஞ்சள், நிறத்துடன் மாறுபட்டு இருக்கும். இந்த நிறம் மற்றும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், நாம் அதை உடனடியாக கவனித்து மருத்துவரை அணுக வேண்டும். சிறுநீரின் எந்த வகையான நிறம் எந்த நோயைக் குறிக்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அறிகுறி
வெளிர் மஞ்சள் : ஒரு நபரின் உடலிலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் ஆரோக்கியமான உள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
அடர் மஞ்சள்: ஒருவரது சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால், அது நீரிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, இது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கக்கூடும்.
சிவப்பு
சிறுநீர் நமது உடலிலிருந்து சிவப்பாக வெளியேறினால் அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். இது சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படவில்லை என்றால், அது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.