வறண்ட சருமா இருக்கா ? சோள மாவை இப்படி யூஸ் பண்ணி பாருங்க...!
சோள மாவைக் கொண்டு சருமத்திற்கு ஸ்க்ரப் மற்றும் பேஸ் பேக் செய்து பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் நீங்கும்.
சோள மாவு
சுற்றுச்சூழல் மாசுபாடு, கொளுத்தும் சூரியக்கதிர்கள், மன அழுத்தம் போன்றவற்றால் சரும செல்களை மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி, சருமத்தின் நிறம் நாளுக்கு நாள் மாற்றமடைகிறது.இதனைத் தடுக்க வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை வழங்க வேண்டியது அவசியம்.
அப்படி கெமிக்கல் மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்களை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள சோள மாவை கொண்டு பயன்படுத்தி நல்ல பலனை அடையாளம். சோள மாவு இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாகும்.
சோள மாவு சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு உதவி செய்து சருமத்தை மிருதுவாக்க செய்யும் தன்மை கொண்டது. மேலும் சோள மாவைக் கொண்டு சருமத்திற்கு ஸ்க்ரப் மற்றும் பேஸ் பேக் செய்து பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்:
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு சிறிய பவுலில் சோள மாவு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு , தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்டை உங்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியைத் தவிர்த்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து 15-20 நிமிடங்களுக்குப் பின்னர் கழுவி விடுங்கள்.
இந்த பேஸ் பேக்கை வாரம் ஒருமுறை போட்டு வந்தால் உங்கள் சருமம் பொலிவாக மாறும். அதே போல் சோள மாவு ,தயிர், சர்க்கரை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 5-10 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான முகத்தை நீரில் கழுவவும்.
வாரம் ஒரு முறை இந்த ஸ்கரப் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் புது பொலிவைப் பெறும்.