எனக்கு மனைவி, குழந்தை இருக்காங்க; வேகத்தை குறைங்க - கவெம் ஹாட்ஜ் கலகல..
மார்க் வுட்டிடம் பேசியதை காமெடியாக கவெம் ஹாட்ஜ் பகிர்ந்துள்ளார்.
2nd Test
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
2வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களை குவித்து களத்தில் உள்ளது. இங்கிலாந்து மண்ணில் விளையாடிய முதல் தொடரிலேயே கவெம் ஹாட்ஜ் சதம் விளாசினார்.
42வது ஓவரை வீசிய மார்க் வுட் ஒவ்வொரு பந்தையும் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு பந்தும் 153 கிமீ வேகத்திற்கு மேலாக வீசப்பட்ட போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கவென் ஹாட்ஜ்,
கவென் ஹாட்ஜ்
நிச்சயம் இது கொஞ்சம் கொடூரமான அனுபவமாக இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு பந்தும் 90 மைல் வேகத்தில் முகத்திற்கு முன் வீசப்படும் போது, கவனமாக இருக்க வேண்டும். அதிலும் ஆட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு பின்னரும் ஒரு பவுலர் ஒவ்வொரு பந்தையும் 90 மைல்களுக்கு மேல் வீசுவதை ஏற்கவே முடியவில்லை.
ஒரு கட்டத்தில் மார்க் வுட்டிடம் சென்று, எனக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்று கூறிவிட்டேன். இருவரும் சிரித்து கொண்டே நகர்ந்தோம். அதேபோல் இங்கிலாந்து மண்ணில் சதம் விளாசியது மனதளவில் நிம்மதியை கொடுக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் எப்போது ஒரு கிரிக்கெட் வீரருக்கு சவாலை கொடுக்கும். மனதளவில் நம்மை பாடுபடுத்தும் வடிவம் தான். ஆனால் மார்க் வுட் போன்ற ஒரு பவுலரை எதிர்கொண்டு சவாலான நேரத்தில் சதம் அடிப்பது மகிழ்ச்சியையும் மன உறுதியையும் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
