சொதப்பிய கம்பீர்; இனி இந்திய அணியை காப்பாற்ற முடியாது - ரசிகர்கள் கதறல்!
ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டன் குறித்த முக்கிய முடிவுகளை கம்பீர் எடுத்துள்ளார்.
கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணி கவுதம் கம்பீர் தலைமையில் தனது முதல் கிரிக்கெட் தொடரை விளையாடவுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கவுள்ளது.
இந்த அணித் தேர்வில், இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவை கம்பீர் நியமித்துள்ளார். அவர்தான் 2026 டி20 உலகக் கோப்பை வரை இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் எனவும் கூறப்படுகிறது.
துணை கேப்டன்
தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான டி20 அணி மற்றும் ஒரு நாள் அணிகளின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்தான் இந்திய அணியின் வருங்கால கேப்டன் எனக் கூறப்படுவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், அணியை யாராலும் காப்பாற்ற முடியாது. அவர் ஒருநாள் அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், டி20 அணியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் தற்போதைக்கு அவர் கேப்டன் பதவியை பெறப்போவதில்லை.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே நீடிப்பார். அதே போல், 2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்ய குமார் யாதவே இந்திய டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
