2வது திருமணம் குறித்து பேசிய பாண்டியா - ரூ.170 கோடி சொத்தை பெற்றுக்கொண்டாரா நடாஷா?
ஹர்திக் பாண்டியா தனது மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் ஒரு ஆல்ரண்டர். பந்துகளை ஃபாஸ்ட் மீடியமில் வலது கையில் வீசக்கூடிய ஆற்றல் பெற்றவர். மிடில் ஆடரில் வலது கையால் பேட்டிங் செய்யக்கூடியவர்.
ஐபிஎஸ் போட்டியில் மும்பை இண்டியன் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஹர்திக் ஆட்டைத்தை தாண்டி அவரது நடை, உடை, பாவனைக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கை திருமணம் செய்துக்கொண்டார்.
2வது திருமணம்?
இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்த ஜோடி கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவில் திருமணம் செய்திருந்தனர். எனவே, கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தின் போதுதான் தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பாண்ட்யா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். தொடர்ந்து, ரூ.170 கோடி சொத்துக்களை நடாஷா ஸ்டான்கோவிக் எழுதி வாங்கிவிட்டதாக தகவல் பரவியது.
ஆனால், ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு ரூ.91 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனது மகனுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் எப்போதும் செய்வேன் என்று ஹர்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.