நடாஷாவின் மாடலிங் தான் பிரச்சனையே - ஹர்திக் பாண்டியா சைலண்டாக ஒதுங்க காரணம் இதுவா?
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா - அவரது மனைவி நடாஷா விவாகரத்து பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் விவாகரத்து
கடந்த சில மாதங்களாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்தார் ஹர்திக். மும்பை அணிக்கு கேப்டனாக பதவியேற்றத்தில் துவங்கி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால், நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடர் அவரை மீண்டும் ஹீரோவாக மாற்றியுள்ளது. அதே நேரத்தில், தற்போது ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்தும் உறுதியாகியுள்ளது.
இவர்கள் விவாகரத்து பெறப்போவதாக நீண்ட நாட்களாகவே கருத்துக்கள் பகிரப்பட்டன. அப்படி செய்திகள் வர பல காரணங்களும் உள்ளன. டி20 உலகக் கோப்பை போன்ற முக்கிய கிரிக்கெட் நிகழ்வுகளின் போது நடாசா இல்லாதது கவனிக்கப்பட்டது.
காரணம்
முக்கியமான தருணங்களில் ஹர்திக்கிற்கு பொதுமக்களின் ஆதரவும் இல்லாதது ஆழமான பிரச்சனைகளாக சுட்டிக்காட்டப்பட்டது. இவருக்கும் மத்தியில் அவ்வப்போது பெரிதாக பேச்சுவார்த்தைகள் இல்லாமல் போனதே முக்கிய காரணியாக கூறப்படுகின்றன.
ஏற்பட்ட சிறுசிறு சலசலப்புகளை முறையாக பேசி தீர்க்க அவர்களின் இயலாமை, தூரத்திற்கு வழிவகுத்தது என்றும் ஒரு தகவல் உள்ளது.
ஹர்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் நடாசாவின் மாடலாக மற்றும் நடிகையாக இருந்த அர்ப்பணிப்பு ஆகியவை அவர்களின் வளர்ச்சிக்கு பங்களித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அதுவே இவர்களின் பிரிவிற்கும் முக்கிய காரணியாக அமைந்து விட்டது என்றும் சில தகவல்கள் உள்ளன.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
