ஹர்திக் பாண்ட்யா ரோலுக்கு நான் ரெடி - சொல்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி!
ஹர்திக் பாண்ட்யா ரோலில் விளையாடத் தயாராகி வருவதாக இளம்வீரர் நிதிஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் ரெட்டி
கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் களமிறங்கியவர் நிதிஷ் குமார் ரெட்டி. அந்த அணியில் மிடில் ஆர்டர் வீரராகவும், ஆல்ரவுண்டராகவும் கலக்கிய அவர், 142 ஸ்டிரைக் ரேட் மற்றும் 33 சராசரியுடன் 303 ரன்களை குவித்தார்.
மேலும், வளர்ந்துவரும் வீரர் விருதையும் நிதிஷ் ரெட்டி பெற்றார். இதனையடுத்து நடந்து முடிந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்தார்.ஆனால், காயம் காரணமாக கடைசி நேரத்தில் தொடரிலிருந்து விலகினார். இந்நிலையில் அணியில் தன்னுடைய வாய்ப்பு குறித்து பேசியிருக்கும் அவர் "என்னை ஓப்பன் செய்யச் சொன்னால் நான் தயாராகவே இருக்கிறேன்.
தயாராகி வருகிறேன்
ஆனால், அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், டாப் ஆர்டரில் எனக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால் கிடைக்கும் இடத்திற்கு நான் என்னை மாற்றியமைக்க வேண்டும். அதை உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தே செயல்படுத்துவதில் நான் கவனம் செலுத்திவருகிறேன்.
எனக்கு பேட்டிங் பொசிஷன் நம்பர் 7 அல்லது நம்பர் 6-ல் விளையாட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் ஹர்திக் பாண்ட்யா ரோலில் நான் விளையாடுவேன் என நினைக்கிறேன். நான் எங்கு கேட்டாலும் பேட்டிங் செய்ய மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், தற்போது ஹர்திக் பாண்ட்யா ரோலில் விளையாடத் தயாராகி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
