உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம் - சி.வி.சண்முகம்..!
திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் தற்போது இல்லை. இரண்டு பதவிகளும் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அவைகள் காலாவதி ஆகிவிட்டன.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி அ.தி.மு.க. பொருலாளர் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக மட்டுமே உள்ளார்.
இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியை வழி நடத்தலாம் என்று கட்சியின் சட்ட விதி கூறுகிறது.
நாங்களும் பார்க்கதான் போகிறோம்
மேலும், அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.