திமுகவை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போயுள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போயுள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நம்ம வீட்டு திருமணம்
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா நேற்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடப்பதை போல் எண்ணி நாம் எல்லாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கொண்டு உள்ளோம்.
திமுக அழிந்ததாக வரலாறு இல்லை
இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை.
அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் இப்போது அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை.
இந்த உணர்வோடு நாம் இருக்கிறோம். நாம் பெருமையுடன் பேசி கொண்டு உள்ளே திராவிட மாடலில் நடைபெறும் திருமணம் இது. அனைவரின் சார்பில் நான் மண மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
சில நாள் ஓய்வுக்குப் பின்பு, மாண்புமிகு அமைச்சர் @KKSSRR_DMK அவர்களின் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
— M.K.Stalin (@mkstalin) June 23, 2022
இதுவும் கழக நிகழ்ச்சிதான். இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்! pic.twitter.com/RehEh4aMbg