உத்தராகண்ட் சுரங்க விபத்து: திருடன், போலீஸ் விளையாடினோம் - மீட்கப்பட்ட தொழிலாளர் பேட்டி!

India Uttarakhand Accident
By Jiyath Dec 03, 2023 02:56 AM GMT
Report

சுரங்கித்தில் சிக்கியிருந்தபோது என்ன செய்தோம் என்பது குறித்து மீட்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளார். 

சுரங்க விபத்து 

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில், சில்க்யாரா முதல் பர்கோட் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென ஏற்பட்ட மண்சரிவால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து: திருடன், போலீஸ் விளையாடினோம் - மீட்கப்பட்ட தொழிலாளர் பேட்டி! | We Played Thief Police Rescued Worker Revealed

இதனையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு, 17 நாட்களுக்கு பிறகு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் சுரங்கித்தில் சிக்கியிருந்தபோது என்ன செய்தோம் என்பது குறித்து மீட்கப்பட்ட தொழிலாளர் அங்கித் என்பவர் ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளார். 

'எலி வளை' தொழிலாளர்களும், ஆஸ்திரேலிய அர்னால்டும் - சுரங்கத்திலிருந்து 41 பேரை மீட்ட ஹீரோக்கள்!

'எலி வளை' தொழிலாளர்களும், ஆஸ்திரேலிய அர்னால்டும் - சுரங்கத்திலிருந்து 41 பேரை மீட்ட ஹீரோக்கள்!

தொழிலாளர் பேட்டி 

அவர் கூறுகையில் "வாழ்வா, சாவா என்ற நிலையில் பரிதவித்தோம். என்ன நடந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்வோம் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டோம். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினோம்.

உத்தராகண்ட் சுரங்க விபத்து: திருடன், போலீஸ் விளையாடினோம் - மீட்கப்பட்ட தொழிலாளர் பேட்டி! | We Played Thief Police Rescued Worker Revealed

எங்களிடம் டைரி இருந்தது. அந்த டைரியில் இருந்து தாள்களை கிழித்து துண்டு சீட்டுகளில் ராஜா,ராணி, மந்திரி, திருடன், போலீஸ் என்று எழுதி குலுக்கி போடுவோம். ஒவ்வொருவரும் ஒரு துண்டு சீட்டை எடுப்போம். திருடனை கண்டுபிடிப்போருக்கு அதிக புள்ளிகள்வழங்குவோம். இந்த விளையாட்டை விளையாடி பொழுதை போக்கினோம்’’ என்றார்.