சுரங்க விபத்து: முதல் 24 மணி நேரம்.. அதன்பின் நடந்தது.. - மீட்கப்பட்ட தொழிலாளர் பேட்டி!
உத்தராகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
சுரங்க விபத்து
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறும்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 17வது நாளாக மீட்புப் பனி நடைபெற்று வந்த நிலையில், நேற்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளி பேட்டி
இந்நிலையில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் ஒருவரான 'சுபோத் குமார் வர்மா' என்பவர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியது குறித்து கூறுகையில் "முதல் 24 மணி நேரம் மிகக் கடுமையாக இருந்தது.
அதன்பின் குழாய் மூலம் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது, தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். எனது உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது. எங்கள் 41 பேரையும் பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொண்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.