செவ்வாய் கிரகத்தில் மனிதர்களா? ஆராய்ச்சியில் முக்கிய கண்டுபிடிப்பு!
செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகம்
சூரியக் குடும்பத்தில் பூமியை அடுத்த 4-ஆவதாக உள்ள செவ்வாய் கிரகத்திலும் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த NWA7034 என்ற விண்கல், 2011-ஆம் ஆண்டில் சகாரா பாலைவனத்தில் விழுந்தது. இந்த விண்கல்லை எடுத்து ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் புவி மற்றும் கிரக அறிவியல் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆராய்ச்சி தகவல்
விண்கல்லிலிருந்து இரும்பு, அலுமினியம், சோடியம், ஜிர்கான் ஆகிய தாதுப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆராய்ந்ததில், இது 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று தெரியவந்துள்ளது. இந்த தாதுப் பொருளில் வெப்பமான நீர் நிறைந்த திரவம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஆராய்ச்சியாளர் ஆரோன் கவோசி, இது பழங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வெப்பமான நீர் கட்டமைப்பு இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படையாக வெப்பநீர் கட்டமைப்பு அவசியமாக இருந்தது.
இதேபோல, செவ்வாய் கிரகம் உருவானபோதும் மனிதர்கள் வாழ்வதற்கான நீர் இருந்ததை தங்களது ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான்-2 விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.