செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மனிதர்கள் - தீவிர பயிற்சி வழங்கும் நாசா!

NASA
By Sumathi Apr 01, 2023 11:32 AM GMT
Report

 ஜூன் மாதம் நான்கு பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகம்

1969 ஆம் ஆண்டு அமெரிக்கா முதன் முதலில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி செய்தது. தற்போது மீண்டும் ஆர்ட்டிமிஸ் திட்டம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளது நாசா.

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மனிதர்கள் - தீவிர பயிற்சி வழங்கும் நாசா! | Nasa To Send 4 Humans To Mars Planet

செவ்வாய்க் கிரகம் தான் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும் அதனால் மனித குடியேற்றம் அமையும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிக்காக நமது இந்தியா, மங்கள்யான் திட்டத்தைச் செயல்படுத்தியது. ஆனால் அந்த திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை.

நாசா பயிற்சி

இப்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. வரும் ஜூன் மாதம் நான்கு பேர் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அவர்களுக்குத் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மனிதர்கள் - தீவிர பயிற்சி வழங்கும் நாசா! | Nasa To Send 4 Humans To Mars Planet

இதற்காக பூமியில் செவ்வாய்க் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி அங்கு மனிதர்கள் எப்படி நடமாட வேண்டும்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? அவர்கள் சமைப்பது எப்படி? உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், மனிதர்கள் செல்லும் விண்கலத்தில் சமையலறை, உடற்பயிற்சிக் கூடம், மருத்துவ சேவைகளுக்கான அறை, மனமகிழ்ச்சி பெறும் அறை மற்றும் வீரர்கள் வசிப்பதற்கான அறைகள் என அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.