செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் சுலபமா கிடைக்கும் : சீன விஞ்ஞானிகள் தகவல்

By Irumporai May 13, 2022 04:29 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

தற்போது குளிர்ச்சியாகவும் வறண்டதாகவும் இருக்கும் செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா? என்பதற்கான ஆராய்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை சீன விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்துள்ள நிலையில், சீனாவின் ஜுராங் ரோவர் செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட குறைந்த ஆழத்திலேயே தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.

முன்னதாக,மே 15, 2021 அன்று செவ்வாய் கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தில் உடோப்பியா ப்ளானிட்டியா (Utopia Planitia) எனப்படும் ஒரு பெரிய சமவெளியில் ஜுராங் ரோவர் (Zhurong Rover) தரை இறங்கியது.மூன்று மாதங்கள் நீடித்த ரோவரின் முதன்மை பணி,செவ்வாய் கிரகத்தின் பண்டைய கால அடையாளங்களைத் தேடுவதாகும்.

அதன்படி,செவ்வாய் கிரகத்தின் வடக்கில் தாழ்வான நிலங்களில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்குப் படுகையின் ஒரு பகுதியாக இருக்கும் சமவெளியில் உள்ள கனிமங்கள்,சுற்றுச்சூழல்,நீர் மற்றும் பனியின் விநியோகம் ஆகியவற்றை ரோவர் ஆய்வு செய்து,கிரகத்தைச் சுற்றி வரும் டியான்வென்-1 ஆர்பிட்டருக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் சுலபமா கிடைக்கும் : சீன விஞ்ஞானிகள் தகவல் | Mars Water On Mars Confirmed Chinese Scientists

இதன்மூலம்,செவ்வாய் கிரகத்தின் ஹெஸ்பெரியன் காலத்தில் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் சூடாகவும் ஈரமாகவும் இருந்ததாகவும்,ஆனால் ஏதோ மாற்றம் ஏற்பட்டு கிரகம் இன்று வறண்ட, உறைந்த பாலைவனமாக மாறியதாக பல விஞ்ஞானிகள் நம்பினர்.

இந்த நிலையில்செவ்வாய் கிரகத்தின் உட்டோபியா பிளானிஷியா படுகையில் வெறும் 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் இருந்ததாகவும்,அவை தற்போது உப்பு தாதுக்களின் வடிவத்தில் உள்ளன எனவும் ரோவரின் ஆரம்ப ஆய்வில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.