‘War On Drugs’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட டிஐஜி இசட் ஆனி விஜயா - வைரலாகும் வீடியோ
நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்த ‘War on Drugs' குறும்படத்தை சமூக விழிப்புணர்வாக முயற்சியாக காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இளைய தலைமுறை அழிக்கும் போதைப்பொருள்
இன்றைய இளைஞர்களில் சிலர் ஏதாவது பார்ட்டியோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் மது அருந்துவது, போதை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களாகவே இருக்கின்றர்கள்.
மாலைநேர மயக்கத்துக்காகவும், பொழுது போக்கிற்காகவும் தொடங்கும் இந்த போதைப்பழக்கம் காலப்போக்கில் இளைஞர்களை போதை என்ற அரக்கன் அடிமையாக்கி விடுகிறான். ஆரம்பத்தில் போதைப் பொருள் வாங்குவதற்காக வீட்டில் திருடத் தொடங்குவான்.
நாளடைவில் குழுக்களாக இணைந்து திருட்டு கும்பலாக மாறி சிறைக்குச் செல்ல ஆரம்பிக்கிறான். எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் செய்பவர்களுக்கு வெட்டி படுகொலை செய்யும் அளவிற்கு இன்றைய காலத்தில் சில இளைஞர்கள் மாறி வருகின்றனர்.
உலகெங்கிலும், சட்டமியற்றுபவர்கள் போராடும் போதை மருந்துகளுக்கு எதிரான போர் மிகவும் கடினமான ஒன்றாகி வருகிறது.

‘War On Drugs’ குறும்படம் வெளியிட்ட டிஐஜி
இந்நிலையில், ‘War On Drugs’ என்ற தீமை குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் இசட் ஆனி விஜயா வெளியிட்டார்.
‘War On Drugs’ இந்த குறும்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நட்சத்திரக் குழுவில் நடித்துள்ளார். மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான காகா எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தை ஆர்.கே.ஜி குரூப்பின் திரு. ஜி.சந்தோஷ் குமார் தயாரித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை மற்றும் RKG இன்ஃபோடெயின்மென்ட் மூலம் பொது நலன் கருதி ‘War On Drugs’ 'போதைக்கு எதிரான போர்' வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தன் மகன் கை வலிமையை வியப்போடு பார்த்த உதயநிதி - வைரலாகும் புகைப்படம்