தன் மகன் கை வலிமையை வியப்போடு பார்த்த உதயநிதி - வைரலாகும் புகைப்படம்
சின்னவர் என்றே அழையுங்கள்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். என் மீது கொண்ட அன்பால் சிலர் என்னை ‘மூன்றாம் கலைஞர்’, ‘இளம் தலைவர்’ என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு அழைக்க வேண்டாம். என்னை சின்னவர் என்றே அழைக்கலாம். என்னை சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். இங்குள்ள பெரியவர்கள் உழைப்பின் முன் நான் சின்னவன்தான் என்று உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இன்பன் உதயநிதி
உதயநிதி ஸ்டாலினுக்கு இன்பன் உதயநிதி என்ற மகன் உள்ளார். கருணாநிதியின் கொள்ளுப்பேரன் கால்பந்து விளையாட்டில் தீவிரமாக கால்தடத்தைப் பதித்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகைக்குப் பிறகு இன்பன் குறித்து கவனம் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது, அவரது மகன் இன்பன் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், தற்போது தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை உதயநிதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய மகன் கை வலிமையை பிரமித்து பார்க்கிறார் உதயநிதி. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள்... ப்ரோ பையன் உங்களைவுட வளர்த்தியா இருந்தும் பை லுக் நீங்க இன்னும் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கிங்க.... சூப்பர் ப்ரோ.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
— Udhay (@Udhaystalin) June 30, 2022
திருமணத்தில் இறந்த தந்தை நினைத்து சோகமாய் நின்ற தங்கை - திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணன்