திருமணத்தில் இறந்த தந்தை நினைத்து சோகமாய் நின்ற தங்கை - திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணன்

Viral Video
By Nandhini Jun 30, 2022 05:43 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணன் 

அந்த வீடியோவில், மணப்பெண்ணின் தந்தை கொரோனாவால் இறந்து விட்டார்.

திருமணத்திற்கான ஏற்பாடுகளின் போது, ​​மணமகள் தந்தையை இறந்ததை நினைத்து சோகமாய் காணப்பட்டாள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அண்ணன் தங்கையின் இந்தக் குறையை மிக அழகாக நிறைவேற்ற ஆசைப்பட்டார்.

திருமணத்தின் முக்கிய சந்தர்ப்பத்தில், அண்ணன் தந்தையைப் போன்ற ஒரு மெழுகு உருவத்தை கொண்டு வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இறந்து போன கணவரின் மெழுகுசிலையைப் பார்த்த மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். மணப்பெண் ஓடி வந்து மெழுகுசிலையாய் இருந்த தன் தந்தையை அணைத்து முத்தமிட்டாள். 

இதைப் பார்த்து அங்கிருந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கண்கலங்கி நெகிழ்ந்து போனார்கள். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

viral video

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா..!