சாப்பிட்டதற்குப் பணம் கேட்ட ஓட்டல் ஊழியர் - காரில் மர்ப நபர்கள் செய்த கொடூரம்!
சாப்பிட்டதற்குப் பணம் கேட்ட ஓட்டல் ஊழியரை மர்ப நபர்கள் காரில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலம் மேக்கர்-பண்டார்பூர் பால்கி நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர உணவகத்தில் காரில் வந்த மர்ப நபர்கள் சிலர் உணவு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்த பின்னர் ஓட்டல் ஊழியர் பில்லுக்கு பணம் கேட்டுள்ளார்.
அப்போது gpay மூலம் பணம் செலுத்துவதாகக் கூறி ஸ்கேனரை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளனர். ஓட்டல் ஊழியர் ஸ்கேனரை எடுத்து வரச் சென்றார். அதற்குள்ளாக அந்த நபர்கள் காரில் தப்பிக்க முயன்றனர்.
இதனைப் பார்த்த ஓட்டல் ஊழியர் ஓடி வந்து காரை மறித்து பணம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டல் ஊழியர் பணம் கேட்டு ஓடி வரவே அவரைகாரின் ஜன்னல் வழியாகக் கையைப் பிடித்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர்.
வீடியோ
பிறகு யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று ஓட்டல் ஊழியரைத் தாக்கி அவரிடமிருந்து ரூ.11,500-ஐ பறித்துக் கொண்டனர். மேலும் அந்த ஊழியரின் கண்ணைக் கட்டி காரின் பின்பகுதியில் அடைத்து வைத்து இருந்தனர்.
பின்னர் மறுநாள் காலையில் மர்ப நபர்கள் அவிழ்த்து விட்டவே அங்கிருந்து அந்த ஓட்டல் ஊழியர் தப்பிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து ஓட்டலுக்கு வந்த ஊழியர், உணவக உரிமையாளருடன் சென்று நடந்த சம்பவம் குறித்து திண்ட்ருட் காவல்துறை நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அங்கிருந்த சிசிடிவி-யில் காட்சிகள் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.