மகாராஷ்டிரா அரசியல் : பால் தாக்கரே விட்டுச் சென்ற கட்சியை காப்பாற்றுவாரா உத்தவ் தாக்கரே

BJP Maharashtra
By Irumporai Feb 22, 2023 10:53 AM GMT
Report

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சுமார் 40 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். '

இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் முதலில் குஜராத்தின் சூரத் நகருக்கும், பின்னர் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு தனி விமானத்தில் சென்றனர். இவர்களுக்காக குவாஹாட்டியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

சிவசேனா மகாராஷ்டிரா

சிவசேனா என்பது கட்சியின் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரே காலத்தில் இருந்த அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. கட்டுப்பாடான கட்சியான சிவசேனாவில் தலைவர் உத்தவ் தாக்கரேயின் நிழலை தாண்டி யாரும் எதுவும் செய்து விட முடியாது.

மகாராஷ்டிரா அரசியல் : பால் தாக்கரே விட்டுச் சென்ற கட்சியை காப்பாற்றுவாரா உத்தவ் தாக்கரே | Maharashtra Politics In Tamil

கட்சியின் 2-ம் கட்டத் தலைவர்கள் கூட அவரிடம் பேசுவதற்கே அஞ்சும் நிலைதான் உள்ளது. அப்படிபட்ட சூழலில் கட்டுப்பாடுகளை தாண்டி சிவசேனா உடைந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

மாநில அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே எப்படி 40 எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு கட்சித் தலைமைக்கு சவால் விடும் நிலைக்கு சென்றார் என்ற ஆச்சரியம் பலருக்கும் உள்ளது.

பாஜக ஆட்சி 

சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தாங்கள் காரணமல்ல என்றும் அதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் பாஜக கூறி வருகிறது. ஆனால் மகாராஷ்டிர மாநில பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூன்று பேர் திரைக்குப் பின்னால் முக்கியப் பங்காற்றியுள்ளனர். சிவசேனா அதிருப்தியாளர்களை மும்பையில் இருந்து சூரத்துக்கும் பின்னர் குவஹாட்டிக்கும் அழைத்துச் செல்ல வாகனங்கள் மற்றும் ஏற்பாடுகளை செய்தது பாஜகவின் எம்எல்ஏக்களான ரவீந்திர சவான், டாக்டர் சஞ்சய் குடே மற்றும் பாஜக இளைஞர் அணித் தலைவர் மோஹித் காம்போஜ் ஆகியோர் கடினமாக செயல்பட்டு கனகச்சிதமாக இந்த பணியை முடித்துள்ளனர்.

இதில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய பாஜக அரசில் சவான் மற்றும் குடே ஆகியோர் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆவர். தற்போது அவர்களும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குவஹாட்டியில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை எல்லாம் முக்கூட்டியே திட்டமிடப்பட்டு சரியான நேரத்தில் செய்யப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் ஆகியோர் இதற்கான முயற்சியை பின்னணியில் இருந்து எடுத்துள்ளனர். எனினும் அவர்கள் கூட நேரடியாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கவில்லை.

ஏக்நாத் ஷிண்டே தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு டெல்லியில் உள்ள பாஜக உயர்மட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு பேசிதயாகவும், பின்னர் பாஜக தலைமை இதனை செய்து முடிக்க மாநில தலைமைக்கு அதிகாரத்தை வழங்க ஒத்துழைப்பு வழங்க கூறியதாக தெரிய வருகிறது. 

பதவிக்கு வந்த ஏக்நாத் ஷிண்டே

அதிருப்தி எம்எல்ஏக்களை மும்பை நகரத்திலிருந்து வெளியேற்றி சூரத் அழைத்து செல்லும் பணி முழுவதுமே மிக விரைவாகவும் அதேசமயம் ரகசியமாகவும் நடத்தி முடிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநில காவல்துறையின் புலனாய்வுப் பிரிவினரால் கூட அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. அந்த அளவிற்கு கண கட்சிதமாக பணிகள் நடந்தேறியுள்ளன. இந்த விவகாரத்தில் பாஜக தலைமை மிகவும் ரகசியமாக செயல்பட்டுள்ளது.

இந்த மூன்று பேர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அதற்காக தெரியாதது போல இருந்து கொண்டது. பாஜகவின் சில மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், இந்த நடவடிக்கையில் மூன்று தலைவர்களின் தலையீடு எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றி தெரியாத அளவிற்கு ரகசியம் காக்கப்பட்டுள்ளது. சிவசேனாவில் நிகழும் எந்த ஒரு விஷயத்திலும் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் திரும்ப திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்.

மகாராஷ்டிரா அரசியல் : பால் தாக்கரே விட்டுச் சென்ற கட்சியை காப்பாற்றுவாரா உத்தவ் தாக்கரே | Maharashtra Politics In Tamil

ஆனால் ரகசியமாக இந்த மூன்று இரண்டாம் கட்டத் தலைவர்களும் சரியான முறையில் செயலாற்றி தங்கள் இலக்கை எட்டி சிவசேனாவை உடைத்து விட்டர். இதுமட்டுமல்லாமல் அடுத்தாக மகாராஷ்டிராவில் என்ன அரசியல் நடவடிக்கையை பாஜக செய்யப்போகிறது என்பதும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சிவசேனையின் அடையாளம் தாக்கரே குடும்பத்துடன் தொடர்புடையது என்றும் அது மீண்டு வருவதற்கு இது உதவும் என்றும் சிலர் நம்புகின்றனர்.

உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே, பால் தாக்கரே பாரம்பரியத்தின் வாரிசுகள். கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், பால் தாக்கரேயின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும்,உத்தவ் தாக்ரே இருமடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உத்தவ் தாக்கரேயின் எதிர்ப்பாளர்கள் அவரது தந்தையின் பாரம்பரியத்தை அவரிடமிருந்து பறித்துவிட்டதாகத் தோன்றுகிறது. அடுத்த சட்டப்பேரவைத்தேர்தலுக்குள் உத்தவ், வலுவான மற்றும் உண்மையான சிவசேனை என்று சொல்லப்படும் நிலைக்கு திரும்புவாரா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. அதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்