அரசுப் பள்ளியில் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம் - பகீர் சம்பவம்!
அரசு ஆரம்பப் பள்ளியில் அழகிகளுடன் சிலர் குத்தாட்டம் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத செயல்
பீகார், சஹார்சா மாவட்டத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. இதன் வளாகத்தில் அரைகுறை ஆடையில் பாரில் நடனமாடும் 4 அழகிகளுடன், சிலர் மது அருந்தி விட்டு ஆபாச நடனம் ஆடியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. அது மாணவர்களின் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின், அங்குள்ள ஒரு நபரின் திருமணத்தை முன்னிட்டு இந்த ஆபாச மற்றும் மது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போலீஸார் விசாரணை
இந்நிலையில் இது தொடர்பாக ஜலை போலீஸ் நிலையம் சார்பில் விளக்கமளித்துள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிக்கு போலீசார் எந்த அனுமதியும் அளிக்கவில்லை.
இந்த வீடியோ வெளியான பிறகு இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது பற்றி தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.