அரைகுறை ஆடை; பலமுறை சொல்லியும் கேட்காத மனைவி - காதல் கணவன் வெறிச்செயல்!
அரைகுறை ஆடை அணிந்ததால் மனைவியை கழுத்தறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகராறு
பெங்களூரு மாநிலம் அரிசிகெரே தாலுகா, ராம்புரா கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஜீவன் (25) - ஜோதி (22). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் மனைவி ஜோதி உடல் பாகங்கள் தெரியும்படி அரைகுறை ஆடைகள் அணிந்து வந்ததாக தெரிகிறது. இது கணவர் ஜீவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கு பிடிக்காத காரணத்தால், அரைகுறை ஆடைகளை அணியக்கூடாது என்று கூறியுள்ளனர்.
ஆனாலும் ஜோதி அதனைக கேட்காமல் அதுபோன்ற ஆடைகளை தொடர்ந்து அணிந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவி கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோதி மீண்டும் அரைகுறை ஆடையை அணிந்து வெளியே சென்றுள்ளார். அப்போதும் ஜீவன் அவரை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜீவன் பைக்கில் ஜோதியை ஏற்றி ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஜோதியை சரமாரியாக தாக்கி, தான் வைத்திருந்த கத்தியால் ஜோதியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஜீவன் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கணவர் ஜீவனை வலைவீசித் தேடி வருகின்றனர்.