பங்களாவில் மாணவி வைத்த மது விருந்து..சிதறி கிடந்த ஆணுறைகள் - அதிர்ந்து போன போலீசார்
கன்னியாகுமரியில் கல்லுாரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர்களுக்கு பெண் தோழிகளை விருந்தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் தனது ஆண் நண்பர்களுடன் வீடு பிறந்த நாள் பார்டிக்கு தயராகி கொண்டிருந்த போது அங்கு வந்த எனது பள்ளி தோழன் எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டிவிட்டு தன்னையும் கட்டையால் தாக்கி மண்டையை உடைத்து விட்டு தப்பியோடியாதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் தப்பியோடி மாணவியின் பள்ளி தோழனை தேடி வந்த நிலையில், சம்பவம் நடந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
அதிர்ந்து போன போலீசார்
அப்போது வீட்டில் சிகரெட் துண்டுகள், கிழிந்த ஆடைகள், மற்றும் ஆணுறைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் புகார் அளித்த மாணவி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
20-வயதான அந்த மாணவி கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் தனது பள்ளி தோழனை கடந்த 6-வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
தனது காதலருடன் பைக்கில் சுற்றி வந்த மாணவி நாளடைவில் தனது கல்லுாரியில் பயிலும் ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் காதலனுக்கு தெரியாமல் தனது உறவினர் வீட்டு பங்களாவின் மாடியில் தனது தோழிகளையும் அவரது ஆண் நண்பர்களையும் அழைத்து வந்து மது விருந்து வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த அவரது காதலன் தனது காதலியை கண்டித்துள்ளார். அதற்கு அந்த மாணவி வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழுடா என்னை நம்பாதே என்னைப்போல் நீயும் என்ஜாய் பண்ணு என்று பேசிய தனது காதலை பிரேக்அப் செய்துள்ளார்.
மண்டையை உடைத்த காதலன்
இந்த நிலையில் மாணவி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தனது உறவினரின் பங்களா வீட்டில் மது விருந்துடன் உல்லாசமாக இருப்பதை அறிந்து அந்த வீட்டிற்கு சென்ற காதலன் மரத்தின் மீது ஏறி மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது தனது காதலி அவரது தோழிகள் சில ஆண் நண்பர்களுடன் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு கிடந்த கட்டையை எடுத்துக் கொண்டு சென்று ஆண்களை கட்டையால் அடித்து விரட்டியுள்ளார். தனது காதலியையும் கட்டையால் அடித்து மண்டையை உடைத்துள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அந்த மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வரத்தொடங்கியுள்ளனர். இதை அறிந்த அந்த காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
வெளியான ஆடியோ
இந்த நிலையில் தப்பியோடிய காதலின் தாயார் தனது மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த மாணவியால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் ஆதாரங்களை வெளியிடுவேன் என பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் அந்த மாணவியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் ஆடியோவும் வெளியாகியுள்ளது இந்த சம்வத்தில் பல மாணவர்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
பெண் பிள்ளைகள் தோழிகளின் அழைப்பை ஏற்று இரவு பெற்றோருக்கு தெரியாமல் தோழிகள் ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டால் என்ன மாதியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி என எச்சரிக்கின்றனர்.