தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் - கற்களை வீசி தாக்குதல்

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Thahir 4 மாதங்கள் முன்

சென்னை பொத்தேரில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்

 சென்னை பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டுமில்லாமல் பிற மாநிலத்தைச் சேர்ந்த மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவன் மாணவிகளும் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 80க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென்று தாக்கி கொண்டார்கள்.

தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்  - கற்களை வீசி தாக்குதல் | Private College Students Fight

கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

பிரபல கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும் தாக்கிக் கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்த மோதல் சம்பவமானது நடைபெற்றுள்ளது. மாணவர்களுக்குள் நடைபெற்ற இந்த மோதலில் கற்களைக் கொண்டு மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் மாணவர்கள் தாக்கிக் கொண்டதில் பலருக்கு ரத்த காயம் , உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, மாணவர்களுக்கிடையே இரு பிரிவினருக்குள் இந்த சண்டை ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளதாகவும், மாணவர்களின் சண்டை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.