30 வருடத்திற்கு முன் இறந்தவர்ளுக்கு திருமணம் : விழாவில் சிக்கன் விருந்து , வைரலாகும் வீடியோ

Viral Video Karnataka
By Irumporai 4 மாதங்கள் முன்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தட்சினா கன்னடா மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆத்ம திருமணம்

கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இறந்தவர்களுக்கு  திருமணம் செய்து வைப்பதை  ஒரு சடங்காக பார்த்து பின்பற்றி வருகிறார்கள். 

30 வருடத்திற்கு முன் இறந்தவர்ளுக்கு திருமணம் : விழாவில் சிக்கன் விருந்து , வைரலாகும் வீடியோ | Man Woman Married 30 Years After Death

அந்த வகையில் தற்போது தட்சினா கன்னடா மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்வு நடந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இரு குழந்தைகளுக்குத்தான் இந்த ஆத்மா திருமணம் நடைபெற்றது.

ஒரு ஆணோ பெண்ணோ தனது இளமை காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் தட்சினா கன்னட மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இரு குழந்தைகளுக்கு ஆத்ம திருமணம் நடைபெற்றது.

திருமண சடங்குகள்

அதில், நிஜ திருமணம் எப்படி நடைபெறுகிறதோ அப்படியேதான் இந்த பிரேத திருமணங்களும் நடைபெறும் என்றும்  இரு இருக்கைகள் போடப்பட்டு அதில் மணமகன், மணமகளின் துணிமணிகளை வைத்து சில திருமண சடங்குகள் செய்யப்படுகின்றன. 

இதனை அன்னி அருண் என்பவர் தவனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.அருண் ஜூலை 28 அன்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும், ஒரு வித்தியாசமான காரணத்திற்காக அதைப் பற்றி எழுதுவதாகவும் கூறி உள்ளார்.

மேலும் இந்த திருமணத்தில் விருந்தில் மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, இட்லி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. இந்த வீடியோக்களை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டு உள்ளனர்