பெண்கள் 8க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - அதிபர் வலியறுத்தல்!

Vladimir Putin World Russia
By Jiyath Dec 01, 2023 07:39 AM GMT
Report

ரஷ்ய பெண்கள் 8க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார்.  

விளாடிமிர் புடின்

ரஷ்யாவில் கடந்த 1990ல் இருந்து பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரில் 3 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் 8க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - அதிபர் வலியறுத்தல்! | Vladimir Putin Urges Womens To Have 8 Children

இந்நிலையில் ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் 'விளாடிமிர் புடின்' வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷ்யாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளா்.

இங்க போனீங்கன்னா 10 பைசா மிஞ்சாது - உலகிலேயே அதிக செலவுமிக்க 2 நகரங்கள்!

இங்க போனீங்கன்னா 10 பைசா மிஞ்சாது - உலகிலேயே அதிக செலவுமிக்க 2 நகரங்கள்!

வலியுறுத்தல் 

இது தொடர்பாக அவர் கூறியதாவது "நம்முடைய பல இனத்தினர் 4,5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களை கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன.

பெண்கள் 8க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - அதிபர் வலியறுத்தல்! | Vladimir Putin Urges Womens To Have 8 Children

நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் 7, 8க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர். இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம்.

ரஷ்யாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு" என்று அவர் தெரிவித்துள்ளார்.