விமானம் வெடித்து வாக்னர் குழு தலைவர் பலி - பின்னணியில் ரஷ்ய புடின்?
விமான விபத்தில் ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் உட்பட 9 பேர் மரணமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வாக்னர் ஆயுதக் குழு
வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் திடீரென வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர். ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வாக்னர் குழுவை ராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்று ரஷ்யா பாதுகாப்புத்துறை முயற்சி செய்தது போன்ற காரணங்களாலும்,
பிரிகோஜின் பலி
வாக்னர் குழுவினர் சிலரை ரஷ்ய ராணுவம் தாக்கியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர். இதனால் உள்நாட்டு போர் ஏற்படும், புடின் ஆட்சி கவிழ்க்கப்படும், பெரிய மோதல் உண்டாகும் என்றெல்லாம் கருதப்பட்டது.
ஆனால் கடைசியில் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேசசுவார்த்தையில் சுமுக தீர்க்க ஏற்படவே வாக்னர் குழு வந்த வழியே திரும்பி சென்றது. இந்நிலையில், நேற்று ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பலியானார்.
அவரின் மரணத்திற்கு பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் என வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது. இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் என்பவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
வாக்னர் கூலிப்படை குழுவுடன் இணைக்கப்பட்ட சமூக ஊடகங்கள் இது பற்றி கூறுகையில் பிரிகோஜின் தனிப்பட்ட விமானம் ரஷ்ய வான் படை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறுகிறது.