நண்பனால் புதினுக்கு வந்த சிக்கல் : வாக்னர் குழுவால் அலறும் ரஷ்யா ? யார் இவர்கள்?

Russia
By Irumporai Jun 24, 2023 11:51 AM GMT
Report

இந்த உலகில் பல கொடுமைகளை மேற்கொண்ட  சாமரஜ்ஜியங்களும் பேரரசுகளும் சரிந்தது, பெரும்பாலும் எதிரிகளால் அல்ல கூடவே இருந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் செய்து நண்பர்கள் போல் பழகி கருவறுத்த துரோகிகளால் தான் .

அன்று தனது தாய் நிலத்தின் ஒரு பகுதியான உகர்னை கைபற்ற பல  அப்பாவி உயிர்களை பழி வாங்கிய ரஷ்யா , தனது நண்பனால் முதுகில் குத்தப்பட்டு பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது முக்கியமாக அதிபர் புதின்.

மிரட்டும் வாக்னர் குழு

ரஷ்யாவில் தற்போது உள் நாட்டு போர் தொடங்கியுள்ளதால் தற்போது அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகின்றது , இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வாகனர் குழுதான் என சர்வவேத செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா அதிபர் புதினுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள வாகனர் குழு பற்றி தற்போது பார்க்கலாம்

துணையாக உள்ள ஒரு தனியார் இராணுவ அமைப்பாகும் . மேலும் இதனை ஒரு கூலிப்படை என்றே கூறலாம் இது ஒரு சிலந்தி வலை அமைப்பு என்றே கூறலாம். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது ரஷ்ய ராணுவத்திற்கு துணையாக வாக்னர் குழு இருந்தது இன்னும் சொல்லப்போனால் இந்த குழு ரஷ்யா மட்டும் அல்லாமல் பிற நாடுகளுக்கு ஆதரவாகவும் ஒரு கூலிப்படை போல செயல்படும்.

நண்பனால் புதினுக்கு வந்த சிக்கல் : வாக்னர் குழுவால் அலறும் ரஷ்யா ? யார் இவர்கள்? | Wagner Group Once The Ally How This Attackers

இதற்கு முன்பு லிபியா, செர்பியா , சூடான் , ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் குழுக்களை இந்த வாக்னர் குழு அடையாளம் தெரியாமல் அழிக்கும் இந்த கூலிபடை கொண்ட இந்த அமைப்புக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு கொடுத்து வந்தார் என்றும் .

ரஷ்ய ராணுவத்தால் செய்ய முடியாத சில சட்ட விரோத செயல்களை இந்த வாக்னர் குழுவினை பயனபடுத்தி பல தாக்குதல்களை புதின் நிகழ்த்தியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

பரவிய வாக்னர் குழு

ரஷ்யாவில் தனியார் ராணுவ சட்டத்திற்கு தடை இருந்தாலும் புதின் ஆதரவோடு வளர்ந்த இந்த குழுவில் 2017 ல் 6000 கொலைகாரர்களிருந்தனர். தற்போது சுமார் சுமார் 5,000 போராளிகள் உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன .

குறிப்பாக உக்ரைன் ரஷ்யா போரின் போது கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள பக்முட் நகரை ரஷ்யா கைப்பற்றியதில் வாக்னர் குழு முக்கிய பங்கு வகித்தது. தற்போது வாக்னர் குழுவில் உள்ளவர்கள் அனைவருக்கும் அதி நவீன் ஆயுதங்களை கையாளும் திறன் கொண்டவர்கள் ஆயுதங்கள் இல்லாமல் சண்டையிடும் திறன் கொண்டவர்கள் .

இவர்களிடம் கருணை என்பதே கிடையாது கட்னையினை நிறைவேற்றும் கூலி படை வீர்ர்கள் எனவே இவர்களை எலைட் கொலைக்காரர்கள் என அழைக்கின்றனர் .

எதற்காக சண்டை

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் இந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியது, இந்த நிலையில் தான் வாக்னர் குழுவின் தலைவராக உள்ள யெவ்ஜெனி ப்ரிக்கோஸ் ரஷ்ய அதிபர் புதினை கொல்ல திட்டம் தீட்டியதாக தகவல்கள் பரவின.

இதனால் ரஷ்ய ராணுவத்தை ஏவிய புதின் வாகனர் குழுவின் சில செயல்பாடுகளை தடுத்துள்ளார். மேலும் வாக்னர் குழுவின் தலைவர் ரஷ்ய ராணுவத்தின் மீது அடக்குமுறைகளை செய்ததாக யெவ்ஜெனி ப்ரிக்கோஸ் புகார் வரவே ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக செயல்பட தொடங்கினார் இந்த நிலையில் தற்போது ஒரு ஆடியோவினை வெளியிட்டுள்ளார் யெவ்ஜெனி ப்ரிக்கோஸ்

அதில் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் ‛‛நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். நாங்கள் சாவுக்கு தயாராக இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை வீழ்த்துவோம். வழியில் எந்தத் தடை வந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம். ஏற்கனவே ரஷ்ய ராணுவத்தை தாக்கியுள்ளோம். எங்கள் படைகள் ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் நண்பர்கள்

யெவ்ஜெனி ப்ரிகோஸ் ரஷ்யாவில் 1961ல் பிறந்தார். இவருக்கும் அதிபர் விளாடிமிர் புதினுக்கும் 1990ல் இருந்து பழக்கம் உள்ளது. மேலும் யெவ்ஜெனி ப்ரிகோசும், புதினும் ஒரே நகரை சேர்ந்தவர்.

இவர்கள் 2 பேரும் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்தவர். இது அவர்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரித்தது.

தனது 18 வது வயதில் திருட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அதன்பிறகு இன்னொரு வழக்கில் 13 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தவர் ஓட்டல் தொழிலை செய்ய தொடங்கினர். சொந்த நகரான பல நட்சத்திர உணவகங்களை திறந்தார். இந்த உணவகம் மூலம் அவருக்கு பெரிய பெரிய நபர்கள் பழக்கமாகின.

இந்த பழக்கத்தின் காரணமாக அவர் கேட்டரிங் வணிகத்துக்குள் நுழைந்தார். கேட்டரிங் தொழிலில் ரஷ்ய அரசின் ஒப்பந்தங்களை பெற்றார். இவருக்கு அதிக ஒப்பபந்தங்கள் கிடைத்தன. இதனால் விளாடிமிர் புதினின் செல்ல சமையல்காரர் என்ற பெயரையும் பெற்றார்.  

பின்னர் இந்த கூலிப்படைகளின் தலைவராக புதினின் அரசியலுக்கு நெருக்கமா செயல்பட தொடங்கினார் , ஆனால் காலத்தின் ஓட்டம் எப்போதும் ஒரே சமமாக இருப்பதில்லை , ரஷ்ய அதிபர் புதினின் உதவியுடன் ராணுவ தளபதி போல உலா வந்த யெவ்ஜெனி ப்ரிக்கோஸ் புதினுக்கே பெரும் எதிரியாக மாறியுள்ளார்.

தற்போது உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக உள்ள ரஷ்யாவில் உள்நாட்டு கலகம் மூண்டுள்ளது, உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது.