18 வயசுலயே அப்படி கேட்டாங்க; கல்யாண வாழ்க்கையில் நடந்தது.. - விஜே ரம்யா வேதனை!

Ramya Tamil TV Shows Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Feb 18, 2024 03:45 PM GMT
Report

தனது திருமண வாழ்க்கை குறித்து விஜே ரம்யா பேசியுள்ளார்

விஜே ரம்யா

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே ரம்யா. இவர் கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

18 வயசுலயே அப்படி கேட்டாங்க; கல்யாண வாழ்க்கையில் நடந்தது.. - விஜே ரம்யா வேதனை! | Vj Ramya Bold Interview About Marriage Life

மேலும், மங்காத்தா, ஓ காதல் கண்மணி, ஆடை, மாஸ்டர், கேம் ஓவர் போன்ற படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜே ரம்யா கடந்த 2014-ம் ஆண்டு அபரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜே ரம்யா, தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "திருமண வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது, புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!

வேதனை 

நான், நடிகையாக மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், என் திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு என் மீது அனுதாபம் தான் வந்து இருக்கும். ஆனால், நான் நடிகை என்பதால், என் மீதான பார்வை மாறுகிறது.

18 வயசுலயே அப்படி கேட்டாங்க; கல்யாண வாழ்க்கையில் நடந்தது.. - விஜே ரம்யா வேதனை! | Vj Ramya Bold Interview About Marriage Life

திருமண வாழ்க்கையில் இருந்து வெளிவர யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி வந்தார்கள் என்றால், அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும். ஒரு பெண் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அனைத்துமே அவளுடைய விருப்பம் அதில் மற்றவர்கள் தலையிட முடியாது. நான் 18 வயதில் படிப்பு, நடிப்பு என்று பிஸியாக இருந்தேன்.

இரவில் சரியாக தூங்காததால், என் கண் சிவப்பாக இருந்தது. அப்போது ஒரு கேமரா மேன், என்னிடம் வந்து நைட் புல்லா சரக்கானு கேட்டாரு, அதைத் கேட்டதும் எனக்கு அழுகையே வந்துவிட்டது. உடனே தனியாக சென்று அழுதேன்" என்று கூறியுள்ளார்.