வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை நாம்தான் முடிவு செய்யனும் - விஜே ரம்யா சூசகம்?
விஜே ரம்யா அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
விஜே ரம்யா
விஜேவாக இருந்து பல பிரபலங்களை பேட்டி கண்டு பிரபலமானவர் ரம்யா. முன்னணி படங்களின் இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளையும் தனியாக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், சங்கத்தமிழன், கேம் ஓவர், ஆடை என அடுத்தடுத்தப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் அவரது திருமண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை. கணவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில், ரம்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில், தன்னுடைய பதின் பருவத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு திரைப்பட சூட்டிங்கிற்கு தான் செல்லும்போது, அசதியில் தன்னுடைய கண்கள் சிவந்து காணப்படும்.
ஓபன் டாக்
அதை ஒரு கேமராமேன், பப்பிற்கு சென்று சரக்கு அடித்தாயா என்று கேட்டார். அவருக்கு பதிலடி கொடுக்க தெரியாமல், தனியாக சென்று அழுதேன். தற்போது அதை நினைக்கும்போது, அவருக்கு பதிலடி கொடுக்காததை நினைத்து வருத்தப்படுகிறேன்.
திருமணம் என்பது அனைவருக்கும் முக்கியமானதுதான். ஆனால் அதுவே வாழ்க்கையின் துவக்கமும் முடிவும் இல்லை. திருமணம் செய்துக் கொள்வதையும் குழந்தை பெற்றுக் கொள்வதையும் மற்றவர் விருப்பத்திற்காக நாம் செய்யக் கூடாது.
நம்முடைய விருப்பப்படிதான் அமைய வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளலாமா அல்லது வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்பதையும் நாம்தான் தீர்மானம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.